OUR CLIENTS
மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி பற்றிய வசனங்களை நீக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை
மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி பற்றிய வசனங்களை நீக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை Posted on 20-Oct-2017 மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி பற்றிய வசனங்களை நீக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை

சென்னை, அக். 20-
விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனங்களை நீக்க வேண்டும் என்று பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வசனங்கள் இடம் பிடித்துள்ளன.

'எங்க ஊரில் பணமேயில்லை, எல்லாம் டிஜிட்டல்தான். ஒரே கியூதான்', 'என்ன இந்த ஐநூறு ரூபாயும் செல்லாதுன்னு சொல்லிட்டாங்களா' என்பது போன்ற வசனங்கள் மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ளன.

சிங்கப்பூரில் ஜிஎஸ்டி வரி குறைவாக இருப்பதாகவும், 28 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கும் இந்தியாவில் இலவச மருத்துவ உதவிகள் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்றும் விஜய் பஞ்ச் பேசும் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு திட்டங்களுக்கு எதிரான இக்காட்சிகளுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். திருவொற்றியூரில் நேற்று நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்த பிறகு நிருபர்களிடம் பேசிய தமிழிசை, விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

Label