OUR CLIENTS
உச்சநீதிமன்றத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம் அணி! : பயத்திலா? தப்பிக்கும் திட்டத்திலா?
உச்சநீதிமன்றத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம் அணி! : பயத்திலா? தப்பிக்கும் திட்டத்திலா? Posted on 20-Oct-2017 உச்சநீதிமன்றத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம் அணி! : பயத்திலா? தப்பிக்கும் திட்டத்திலா?

சேலம், அக்.20-
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் தலைகீழாக மாறிக்கிடக்கிறது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’தொடங்கினார். பிப்ரவரி 18ம் தேதி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட எம்எல்ஏக்கள் பாண்டியராஜன், செம்மலை, நட்ராஜ், ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ் ஆகியோர் வாக்களித்தனர். எனினும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது. சுமார் 6 மாதங்கள் உருண்டோடிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தது.

இதையடுத்து டி.டி.வி.தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேர் தனி ஆவர்த்தனம் செய்து ஆளுநரைச் சந்தித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தனித்தனியே மனு கொடுத்து அதிர்ச்சி கொடுத்தனர். எரிச்சலடைந்த சபாநாயகர் தனபால் கம்பம் எம்எல்ஏ ஜக்கையனை தவிர மற்ற 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அந்த எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர், அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 12 எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக செப்.25ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நவம்பர் 3ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் கசிகிறது. 

இந்நிலையில்தான் எம்எல்ஏ செம்மலை உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஏற்கனவே ஆந்திர சபாநாயகர் அதிகார வரம்பு சம்மந்தப்பட்ட பிரரச்னை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வீல் விசாரணைக்கு இருக்கிறது. அதோடு சேர்ந்து தமிழக வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசியல் சாசன அமர்வில் இருக்கும் ஆந்திர வழக்கு என்னாச்சு?. ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை ரோஜா 2015ல் டிசம்பர் 18ம் தேதி ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவதூறாக பேசியதாக சபாநாயகர் சிவபிரசாத் ராவால் ஓராண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து ரோஜா ஆந்திர உயர்நீதிமன்றத்தின் படியேறினார். அடுத்து உயர்நீதிமன்ற வழக்கை தாமதப்படுத்துவதாக கூறி உச்சநீதிமன்றத்தை அணுகினார். ஆனால் உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை முடித்து கொள்ள ஆணையிட்டது மறுபடியும் உயர்நீதிமன்றம்.

மறுபடியும் உயர்நீதிமன்ற படியேறினார் ரோஜா. ரோஜாவுக்கு விதிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது ஆந்திர உயர்நீதிமன்றம். உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துதான் ஆந்திர அரசு உச்சநீதிமன்றம் சென்றது சபாநாயகரின் அதிகாரம் என்ன? அதில் நீதிமன்றம் தலையிடலாமா? என்ற கேள்விகளை எழுப்பியது ஆந்திர அரசு. அந்த வழக்குதான் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை சுட்டிக்காட்டிதான் செம்மலை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முதலில் ரோஜா வழக்கு நடந்தபோது  ஆந்திர அரசு வழக்கறிஞர் சபாநாயகர் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைதான் சுட்டிக்காட்டி பேசினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரோஜா மனுவை தள்ளுபடி செய்தார். ஆனால் ரோஜா உச்சநீதிமன்றத்தை அணுகி மறுபடியும் உயர்நீதிமன்றத்துக்கு வந்து வெற்றி பெற்றார் என்றார்கள்.

உச்சநீதிமன்றத்தை அணுகியது பயமா? தாமதப்படுத்தவா? என்ற கேள்விக்கு பதிலளித்த செம்மலை ஒரு பொருள் குறித்த இரு வழக்குகள் வெவ்வேறு இடத்தில் நடப்பது நல்லதா? தமிழகத்தில் நடக்கும் வழக்கு என்ன? பேரவைத் தலைவரின் அதிகாரம் பற்றித்தானே? அதுதானே அதில் சம்மந்தப்பட்டு இருக்கிறது. அதனால்தான் உச்சநீதிமன்றம் சென்றார் செம்மலை. உச்சநீதிமன்றத் தீர்ப்புதானே எல்லாவற்றையும் இறுதி செய்யும் வேறு எதுவும் இதற்கு உள்நோக்கம் இல்லை. கீழ் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு. மேல் நீதிமன்றத்தில் இருந்தால் அதை மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்பதே சட்ட விதி. அதைத்தான் செம்மலை செய்துள்ளார். எங்களுக்கு பயமில்லை என்று சொல்கிறார் செம்மலை. ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்கள் 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.டி.வி.தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன் அக்டோபர் 13ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் தங்களுக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிடுமோ? என்ற பதற்றத்தில் உச்சநீதிமன்றத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் அணி ஓடியதாக திமுக தரப்பும், டிடிவி தரப்பும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

செம்மலை மனு மீது விசாரணை தொடங்கும்பட்சத்தில் எங்களை சேர்த்து விசாரிக்க வேண்டும். எங்களை விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று திமுகவும், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்திருப்பது இன்னும் பரபரப்பை கூட்டியுள்ளது. எது எப்படியோ தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை மட்டும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label