OUR CLIENTS
தீபாவளி மதுவிற்பனை குறைவு மதுப்பிரியர்கள் குறைகிறார்களா?
தீபாவளி மதுவிற்பனை குறைவு மதுப்பிரியர்கள் குறைகிறார்களா? Posted on 20-Oct-2017 தீபாவளி மதுவிற்பனை குறைவு மதுப்பிரியர்கள் குறைகிறார்களா?

சென்னை, அக்.20-
தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி மது விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் பிரச்சாரம் காரணமாக மதுப்பிரியர்கள் குறைந்துள்ளார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனை இந்த ஆண்டு 20 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு முதல் நாளான 17-ம் தேதி ரூ.91 கோடிக்கும், அக்.18 தீபாவளி அன்று ரூ.132 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
கடந்தாண்டு இரு நாளிலும் 245 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு இரண்டு நாளிலும் சேர்த்து மொத்தம் ரூ.223 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

இதன் மூலம் மதுப்பிரியர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் அதிக அளவில் திரண்டு போராட்டம் நடத்தியது காரணமாக இருக்கலாம். மறுபுறம் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆயிரக்கணக்கான கடைகளை மூடியது உள்ளிட்டவையும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழக அரசு மதுபாட்டில் விலை, பீர் பாட்டில் விலையை உயர்த்தியது. விலை ஏற்றத்திற்கு பிறகும் மொத்த விற்பனை தொகையின் அளவு கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விலை ஏற்றம் இல்லாமல் இதைப் பார்த்தால் இன்னும் குறைந்துள்ளது என்றே கூறலாம். இது தமிழகத்தில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை காட்டுவதாக எடுத்துக்கொள்வதா என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Label