OUR CLIENTS
பேரணாம்பட்டில் தினமும் 12 மணிக்கு வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கறீம்!
பேரணாம்பட்டில் தினமும் 12 மணிக்கு வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கறீம்! Posted on 20-Oct-2017 பேரணாம்பட்டில் தினமும் 12 மணிக்கு வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கறீம்!

குடியாத்தம், அக்.20-
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு தில்லு முல்லுகள் நடைபெற்று வருகிறது. கார்கூர் ஊராட்சி செயலாளராக உள்ள ரஜினி என்பவர் சரியாக வேலைக்கு வராமலும் பல்வேறு தில்லு முல்லு வேலைகளைச் செய்து வருவதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கறீமிடம் புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது.

ரஜினி மீது எவ்வளவோ வாய்மொழி புகார்கள் சென்றும், ரஜினி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் தன்னைக் கண்டு கொள்ளாமலிருக்க, அப்துல் கறீமுக்கு ரஜினி, மாதா மாதம் கப்பம் கட்டிவிடுவதாக கூறப்படுகிறது. இதுபோல் ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் ஏட்டில் அடங்காத அளவுக்கு தப்புகள் செய்கின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கறீமால்தான் ஒன்றும் கிழிக்க முடியவில்லையே என்று, திருப்பத்தூரில் உள்ள மண்டல ஊராட்சிகள் இயக்குனர் பிரேம்குமாரிடம் சென்று தவறு செய்கின்ற ஊராட்சி செயலாளர்கள் மீது ஆதாரப்பூர்வமான புகார்களை அளித்தால், எதையோ, வெட்டி முறிப்பது போல் புகார்களைப் பெற்றுக் கொள்ளும் பிரோம்குமார், தவறு செய்த ஊராட்சி செயலாளர்களை திருப்பத்தூருக்கே வரவழைத்து எலும்புத் துண்டுக்கு அலைகிற நாயைப்போல தவறு செய்யும் ஊராட்சி செயலாளர்களிடம் கப்பத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களை மனதார வாழ்த்தி அனுப்புவதாகக் கூறப்படுகிறது. 

இதஒருபுறம் இருக்க, வட்டார வளாச்சி அலுவலர் அப்துல் கறீம் தினமும் அலுவலகத்துக்கு நண்பகல் 12 மணிக்கு வருவதாகவும், அப்துல் கறீம் வரும் வரை பல்வேறு தேவைகளுக்காக வருகை தரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கால்கடுக்க காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏன் இப்படி தினமும், காலதாமதமாக வருகிறீர்கள் என்று ஒரு சில செய்தியாளர்கள் அப்துல் கறீமிடம் கேட்டால், நான் வாலாஜாவிலிருந்து வர வேண்டும். அதனால்தான் தினமும் காலதாமதமாக வருகிறேன் என்று திமிராக பதில் சொல்வதாகவும் கூறப்படுகிறது. தவறு செய்கின்ற ஊராட்சி செயலாளர்களை தண்டிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்கறீமுக்கு ஒரு சம்பவத்தை இங்கே நினைவுக் கூறுகிறோம். ஒருசமயம் நபிகள் நாயகத்திடம் ஒரு தாய், தனது மகனை அழைத்து வந்து தனது மகன் இனிப்பு அதிகமாக சாப்பிடுவதாகவும் நாங்கள் சர்க்கரை வியாதி வரும் என்று சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறான் என்றும் உங்களை நேசிக்கும் நீங்கள் சொன்னால் அதன்படி நடந்து கொள்வான் என்றும் கேட்டுக் கொண்டார் நபிகள் நாயகம். அப்பெண்மணியை இரண்டு வாரம் கழித்து நபிகள் நாயகத்தை வந்து பார்த்தார். நபிகள் நாயகம் பெண்மணியின் மகனை தனது மடி மீது அமர்த்திக் கொண்டு பிள்ளை இனிமேல் நீ அதிகம் இனிப்பு சாப்பிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். சிறுவனும் அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக் கொண்டான். 

அம்மா, சிறுவனுக்கு அறிவுரரைக் கூறிவிட்டேன் அழைத்துச் செல்லுங்கள் என்றார். அதற்கு அப்பெண்மணி இந்த இரண்டு வார்த்தையை நான் முதலில் வந்தபோதே, நீங்கள் கூறி இருக்கலாமே, என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் நீங்கள் முதலில் வந்தபோது, எனக்கும் இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தது என்றும் இப்போது நான் இனிப்பு சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிட்டேன். இப்போது உன் மகனுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு வந்துவிட்டது என்றும் கூறினார்.

இதைக்கேட்டு, மெய்சிலிர்த்துப் போனார் அப்பெண்மணி, இதைப்போலத்தான் வேலைக்கு ஒழுங்காக சரியான நேரத்துக்கு வராத வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கறீம் ஊராட்சி செயலாளர்கள், செய்கின்ற தப்பை எங்கே தட்டிக் கேட்கப் போகிறார். அதனால் மண்டல ஊராட்சிகள் இயக்குனர் பிரேம்குமார், பேரணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்கறீம் ஆகியோர்கள் எருமை மாட்டு மீது மழை விழுந்தது போல் தங்களது கடமைகளை ஒழுங்காகச் செய்யாமல் தண்டச்சம்பளம் வாங்கி பசியாறுவதை விட விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு இந்திய நாட்டின் நலனைப் பேணிக்காத்திட உதவி செய்ய வேண்டுமென்பதே, சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Label