OUR CLIENTS
பிரதமர் மோடி நம்மோடு இருப்பதால் ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது ராஜேந்திரபாலாஜி பேச்சு
பிரதமர் மோடி நம்மோடு இருப்பதால் ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது ராஜேந்திரபாலாஜி பேச்சு Posted on 23-Oct-2017 பிரதமர் மோடி நம்மோடு இருப்பதால் ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது  ராஜேந்திரபாலாஜி பேச்சு

பெரியகுளம், அக். 23-
பிரதமர் மோடி நம்மோடு இருப்பதால், அதிமுக ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார். 

தேனி மாவட்டம், பெரிய குளத்தில் அதிமுகவின் 46வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் வெள்ளியன்று இரவு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:  எங்கள் அணியில் 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 90% பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். டெல்லி நம்மிடம் உள்ளது. பிரதமர் மோடி நம்மிடம் உள்ளார். நமக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர் பார்த்து கொள்வார். அதனால் யாரும் நம்மை மிரட்டவோ, அழிக்கவோ முடியாது. 

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். அதன் பின்னர் தான் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடைபெறும். சின்னம் எங்களுக்கு கிடைத்ததும், அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் ஒன்றாகி விடும். டெங்கு காய்ச்சலை தடுக்க எடப்பாடி அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று கமலஹாசன் ஆட்சிக்கு வர நினைக்கிறார். அது நடக்காது. நூறு ஆண்டுகள் அதிமுக ஆட்சி செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

Label