OUR CLIENTS
சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடரும் மர்மங்கள் : அப்போலோவில் இருந்து அரசு மருத்துவமனைக்கு இரவோடு இரவாக நோயாளிகள் கடத்தப்படும் அவலம்!
சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடரும் மர்மங்கள் : அப்போலோவில் இருந்து அரசு மருத்துவமனைக்கு இரவோடு இரவாக நோயாளிகள் கடத்தப்படும் அவலம்! Posted on 23-Oct-2017 சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடரும் மர்மங்கள் : அப்போலோவில் இருந்து அரசு மருத்துவமனைக்கு இரவோடு இரவாக நோயாளிகள் கடத்தப்படும் அவலம்!

சென்னை, அக். 23-
சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் அப்போலோ மருத்துவமனையும் ஒன்று. ஆனால் இன்று அந்த மருத்துவமனையின் பெயர் பொதுமக்கள் மத்தியில் முகத்திரை கிழித்தெரியப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அப்போலோ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதுதான் காரணம் என்று இணையதளங்களில் வைரலாக வீடியோக்கள் உலா வர ஆரம்பித்துள்ளன.

இந்த மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரும், முதன்மை செயலாளருமான ராதாகிருஷ்ணன் பின்புலமாக செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு பல ஆதாரங்களை முன் வைத்து அந்த வலைதளத்தில் செய்திகள் ஆதாரங்களுடன் பரப்பப்பட்டு வருகிறது. தனது தாயை மூக்கில் ரத்தம் வழிந்ததற்காக அனுமதித்த ஒருவர் தரும் பேட்டியில், தவறான அறுவை சிகிச்சை செய்து விட்டு இரவோடு இரவாக பலரது உதவியுடன் அந்த பெண்ணை அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாதவர் போல கொண்டு போய் சேர்த்துவிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

தற்போது அந்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ரூ.2 கோடி இழப்பீடு தருவதாக அந்த பெண்ணின் மகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சமூக வலைதளங்களில் காணொலியை பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் இளகிய மனம் படைத்தவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இப்படி ஆங்காங்கே தமிழகம் முழுவதும் கிளையை வைத்துள்ள அப்போலா மருத்துவமனை நிர்வாகம் பணத்தை கறப்பதில் மட்டுமே குறியாக செயல்படுகிறது என வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் போன்றோர் துணை போகின்றனர் என்பதுதான் அதிர்ச்சி தகவலாகும். நியாயம், நேர்மை, சத்தியம் தவறி விட்டனர் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என்பதற்கு மேற்கூரிய ஒரு சான்றே போதுமானதாகும். 

இதுபோன்று அப்போலோ மருத்துவமனை மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஆனால் அரசியல் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்க முன்வராமல் அமைதி காப்பது எதனால் என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்த அவர்களது வாயை அடைத்து வைத்துள்ளது அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என்றுதான் சொல்ல வேண்டும். பணம் பாதாளம் வரை பாய்கிறது அப்போலா நிர்வாகத்தில் என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை. இதற்கு அரசியல்வாதிகள் பின்புலமாக மறைமுகமாக செயல்படுகின்றனர். பல மர்மங்கள் அடங்கியுள்ளது அப்போலா மருத்துவமனை நிர்வாகத்தில் என்று சொன்னால் அது மிகையாகாது. முறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., மரணத்திலும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி விவாதப் பொருளாகி விட்டது. இந்நிலையில் காவல் துறையைச் சேர்ந்த ஒருவரையே அப்போலோ நிர்வாகம் கடத்தியதாக தற்போது புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவல்லிக்கேணியில் குடியிருக்கும் கமலநாதன் என்பவர் தனது மனைவியை இதய நோய் சிகிச்சை பிரிவில் அப்போலோவில் சேர்த்துள்ளார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், தாமதித்தால் அவரது உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்வதற்கு உடனடியாக ரூ. 23 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உடனடியாக பணத்தை கட்டியுள்ளனர் அந்த குடும்பத்தினர்.

இதற்கிடையே கமலநாதனின் மகனும், மகளும் காவல் துறையில் பணிபுரிகிறார்கள் என்ற தகவல் கிடைக்கப்பெற்றது. மகள் லதா மெரினா கடற்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார். மகன் ஹேமநாதனும் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றுகிறார். அறுவை சிகிச்சைக்கு பணத்தை செலுத்தியதும் தயார் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அது, அப்போலா மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிருக்கு போராடும் நிலையில் சென்ட்ரல் எதிரே உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டோம். அங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என அப்போலோ நிர்வாகம் தனது கடமையை முடித்து கொண்டது.  இந்த தகவலை கேள்விப்பட்டு பதறியடித்து கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தால்,, தன் மனைவி அநாதையாக உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்துள்ளார் கமலநாதன். தங்கள் குடும்ப அனுமதி இல்லாமல் ரூ.23 லட்சத்தையும் மனிதாபிமானமே இல்லாமல் வாங்கி கொண்டு அரசு மருத்துவமனைக்கு அப்போலோ நிர்வாகம் மாற்றியது எப்படி என்பது கமலநாதன் குடும்பத்துக்கு இதுநாள் வரை புரியவேயில்லை. இதய நோயாளியான தனது மனைவியை அரசு மருத்துவமனையில் இருந்து மீட்டு வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்ததில் நோயாளி ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளாராம். தனது மகனும், மகளும் காவல் துறையில் பணியாற்றி கொண்டிருக்கும்போதே தனக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருப்பதை நினைத்து சொல்லொனா வேதனை அடைந்துள்ளார் கமலநாதன்.

அப்போலோ மருத்துவமனையில் பல பயங்கரங்கள் வெளியில் வராமல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஹேமநாதன் அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் நியாயம் கேட்டால், சரியான பதிலை கூறவில்லையாம் மருத்துவமனை நிர்வாகம். எந்த பிரச்னை என்றாலும் தைரியமாக சந்தித்து வருகிறது அப்போலா நிர்வாகம். காரணம் அரசியல்கட்சிகள், அரசியல்வாதிகள், அரசும் அப்போலா பின்னால் செல்வதால் இதுபோன்ற தெனாவெட்டுடன் செயல்படுகிறது இந்த நிர்வாகம். அப்போலா நிர்வாகத்தில் தனக்கு நேர்ந்ததை போன்று வேறு யாருக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்று வாட்ஸ் அப்பில் இந்த தகவலை 3 பிரிவுகளாக பிரித்து செய்தியாக அனுப்பியுள்ளார் காவல் துறை உதவி ஆய்வாளர் ஹேமநாதன்.  

வாட்ஸ் அப்பில் தகவல் வந்த ஒன்றிரண்டு நாளில் ஹேமநாதனை காணவில்லை என்று அவரது தந்தை கமலநாதன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கர சுப்பு வாயிலாக ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் முறைகேடுகளை வாட்ஸ் அப்பில் அம்பலப்படுத்தியதற்காக அப்போலோ நிர்வாகம் அவரை கடத்தியிருக்கலாம என்று பேசப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை இந்த வாரம் வர உள்ளது என்று சங்கர சுப்புவின் ஜூனியர் வழக்குரைஞர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்தியிடம் விசாரித்தால் நான் எந்த தகவலும் தர இயலாது என்று தெரிவித்துவிட்டார். காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஹேமநாதனின் சகோதரி லதா கூறுகையில், எங்களது தாயின் உயிரை காப்பாற்ற அப்போலோவுக்கு சென்றோம். 

இப்போது எனது தம்பியும் காவல் துறை உதவி ஆய்வாளருமான ஹேமநாதனை  காப்பாற்ற உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம் என்றார். அப்போலோ நிர்வாகம் யாரோ கைக்கூலிகளை பயங்கரவாதிகளை பக்கபலமாக வைத்து கொண்டு இயங்குவது மட்டும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதாப் ரெட்டி இதுபோன்ற பயங்கரவாதி என்பது பலருக்கும் இப்போது மெல்லமெல்ல தெரிய வந்துள்ளது. சமுதாயத்தில் பெரிய மனிதன் போர்வையில் நடமாடும் பசுத்தோல் போர்த்திய புலி என்று தெரியவந்துள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இது ஜெயலலிதா மரணத்திலும் விதிவிலக்கல்ல. 

அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இதுபோன்ற புகார்களில் சிக்காமல் மக்களின் நோய் தீர்க்கும் மருத்துவமனையாக மட்டும் செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் ஏகோபித்த விருப்பமாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முதல் தற்போது நடப்பது வரை அப்போலோவில் அனைத்துமே மர்மமாக உள்ளது. இதற்கு தமிழக அரசுதான் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மத்திய அரசாவது அப்போலோவில் என்னதான் நடக்கிறது என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்பதே அப்பாவி நோயாளிகள் முதல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரை கேட்கும் ஒரே கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்னை என்றைக்கு முடிவுக்கு வருகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label