OUR CLIENTS
ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் மனு
ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் மனு Posted on 24-Oct-2017 ஆர்.கே.நகர் தொகுதியில்  45 ஆயிரம் போலி வாக்காளர்கள்  ராஜேஷ் லக்கானியிடம்  தி.மு.க. அமைப்புச் செயலாளர் மனு

சென்னை, அக்.24-
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க வேண்டும் என்று ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு கொடுத்தார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஸ் லக்கானியை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.  ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-  ஆர்.கே.நகர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது. இந்த தொகுதியில் உள்ள 2 லட்சத்து 51 ஆயிரம் வாக்காளர்களில் 45 ஆயிரம் வாக்காளர்கள் போலி வாக்காளர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது.

பூத், தெரு வாரியாக 45 ஆயிரம் போலி வாக் காளர்களின் பட்டியலை கண்டறிந்து ஏற்கனவே நாங்கள் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்திருந்தோம். இதில் 17 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் போலியாக இடம் பெற்றிருப்பதை தேர்தல் ஆணையம் ஒத்துக் கொண்டுள்ளது.  ஆனால் போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து இன்னும் நீக்காமல் உள்ளனர். எனவே இடைத் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று ராஜேஷ் லக்கானியிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர் நடவடிக்கை மேற்கொள்வதாக வழக்கம் போல் பதில் கூறினார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வருகிறது.  இதை ஆர்.கே.நகர் தொகுதியில் முதலில் செயல் படுத்தினால் தேர்தலுக்கு முன்பாக போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க முடியும் என்று எடுத்து கூறினோம். அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். போலி வாக்காளர்களை நீக்கா விட்டால் நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Label