OUR CLIENTS
தொலைபேசியில் கொலை மிரட்டல் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகார்
தொலைபேசியில் கொலை மிரட்டல் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகார் Posted on 24-Oct-2017 தொலைபேசியில் கொலை மிரட்டல்   : தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகார்

சென்னை, அக்.24-
தொலைபேசியில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-  நேற்று முன்தினம் மாலை 4 மணி வரையில் என்னை போனில் தொடர்பு கொண்டு சிலர் மிரட்டினார்கள்.   இதுபோன்று போனிலும், சமூக வலைத்தளங்களிலும் என்னை விமர்சித்து வருவது தவறான அணுகு முறையாகும்.

மிரட்டல்களைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். மெர்சல் குறித்து எனது கருத்தையே பதிவு செய்தேன். தவறாகப் பதிவிடவில்லை. இப்போதும் எனது முடிவில் உறுதியாகவே உள்ளேன்.

ஜிஎஸ்டி குறித்து தவறான கருத்துக்கள் உள்ளதால்தான் மெர்சல் படத்தை எதிர்த்தோம், கருத்து சுதந்திரத்தை பறிக்கவில்லை. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன்  கூறியுள்ளார்.

Label