OUR CLIENTS
கட்டுமான திட்டங்களுக்கு விலக்கு அளிப்பதில் முறைகேடு!
கட்டுமான திட்டங்களுக்கு விலக்கு அளிப்பதில் முறைகேடு! Posted on 24-Oct-2017 கட்டுமான திட்டங்களுக்கு விலக்கு அளிப்பதில் முறைகேடு!

சென்னை, அக்.24-
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் விலக்கு பெற, கட்டுமான திட்டங்களை பரிந்துரைத்ததில், டி.டி.சி.பி., எனப்படும், நகர், ஊரமைப்புத்துறை அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்தும் விதிகள், ஜூன், 22ல் வெளியாகின. இதற்காக, தற்காலிக ஆணையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

ஜூன், 22 நிலவரப்படி, பணி நிறைவு சான்றி தழுக்கு விண்ணப்பித்த திட்டங்கள், இச்சட்டத்தில் இருந்து விலக்கு பெறலாம் என, அரசு அறிவித்தது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே, பணி நிறைவு சான்று வழங்கும் நடைமுறை உள்ளது. சென்னைக்கு வெளியே, இந்த நடைமுறை இல்லாத, டி.டி.சி.பி., பகுதி களில், இச்சட்டத்தில்இருந்து விலக்கு பெறும் கட்டடங்களுக்கான வரையறையை,ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.

இதன்படி, தூண்கள், பீம்கள் அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில் உள்ள கட்டுமான திட்டங்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்துக்கு உட்படாது. இதை, உறுதி செய்ய, கட்டுமான நிறுவனங்கள், அதற்கான பொறியாளர்கள் அளித்த சான்று மற்றும் புகைப்பட ஆதாரங்களை தர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில், விலக்கு பெறும் கட்டுமான திட்டங்கள் பட்டியலை, டி.டி.சி.பி., அதிகாரிகள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அளிக்க வேண்டும். இதில்,டி.டி.சி.பி., அதிகாரிகள் அனுப்பிய பட்டியலில், முறைகேடுகள் நடந்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்க தலைவர், கே.எம்.சதானந்த் கூறியதாவது: ரியல் எஸ்டேட் சட்டத்தில் விலக்கு பெற, முதலில், 106 கட்டுமான திட்டங்கள் பட்டியலையும், அடுத்த கட்டமாக, 188 திட்டங்கள் அடங்கிய பட்டியலையும், டி.டி.சி.பி., வெளியிட்டது. விபரம் இல்லை அதில், பல திட்டங்களில் முழுமையான விபரம் இல்லை.

ரியல் எஸ்டேட் சட்ட விதிகளுக்கு மாறாக, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதிலும், பதிவு பெற்ற பொறியாளர்கள் சான்றளித்த விபரங்கள் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது குறித்து, அரசுக்கும் புகார் அனுப்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Label