OUR CLIENTS
போலி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு சீல்!
போலி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு சீல்! Posted on 24-Oct-2017 போலி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு சீல்!

காஞ்சிபுரம், அக்.24-
காஞ்சிபுரம் மாவட்டம், புதுபெருங்களத்தூரில் முறையான பதிவுபெற்ற மருத்துவர்களினால் நடைபெற்று வந்த காமாட்சி தனியார் மருத்துவமனையில் பதிவுபெறாத போலி மருத்துவரால் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

இதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு உடனடியாக சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டார்.பொதுமக்களின் உயிருக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்படும் இதுபோன்ற மருத்துவமனைகளில் செயல்பாடு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 

இதைபோன்று மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் முறையாக அரசு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் அங்கு அந்த மருத்துவமனையின் பதிவுபெற்ற மருத்துவர் இல்லாமல் அவர்கள் பெயரில் வேறு தகுதியற்ற, போலி மருத்துவர் கொண்டு சிகிச்சை அளிப்பது தெரியவந்தால் அந்த மருத்துவமனைகள் மீது உடடினயாக நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைக்கப்படும்.

மேலும், அந்த மருத்துவமனையை நடத்தி வந்த மருத்துவர்களின் பதிவை ரத்து செய்ய மருத்துவ கழகத்திற்கு பரிந்துரைக்ககப்படும். இதுமட்டுமின்றி முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளும் சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை  விடுத்துள்ளார். இவ்வாறு பத்திரிகை 
செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Label