OUR CLIENTS
இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி அணிக்கு சென்றால் கட்சி அழிந்து விடும்
இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி அணிக்கு சென்றால் கட்சி அழிந்து விடும் Posted on 24-Oct-2017 இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி அணிக்கு சென்றால் கட்சி அழிந்து விடும்

சென்னை, அக்.24-
இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு சென்றால் கட்சி அழிந்து விடும் என டிடிவி தினகரன் கூறினார். 

டிடிவி தினகரன் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஜெயலலிதா மரணத்தில் நீதி தேவை என்று கூறியவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். தமிழகத்தில் ஒரு இயக்கத்தை அழித்துவிட்டு வளரலாம் என்று நினைத்தால் அது நடக்காது . தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக முடிவு எடுக்காது, இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். ஒருவேளை ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சென்றால் அதிமுக கட்சி அழிந்து விடும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, வருமான வரித்துறைக்கு அமைச்சர்கள் பயப்படுகின்றனர்.  முதல்வர், துணை முதல்வர் அணிகளின் பிரமாண பத்திரங்களின் குறைபாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளிப்போம்.   இவ்வாறு, டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Label