OUR CLIENTS
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சி.ஆர்.சரஸ்வதி கடும் கண்டனம்!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சி.ஆர்.சரஸ்வதி கடும் கண்டனம்! Posted on 24-Oct-2017 அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சி.ஆர்.சரஸ்வதி கடும் கண்டனம்!

பூவிருந்தவல்லி, அக்.24-
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் அதிமுக 46வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எல்லாவற்றையும் மோடி பார்த்து கொள்வார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்ன கருத்துக்கு சி.ஆர். சரஸ்வதி கடும் கண்டனம் தெரிவித்து பேசினார். 

அதிமுக வரலாற்றில் பிரதமர்தான் ஜெயலலிதாவை சந்திக்க வந்திருக்கிறார் எனவும் கருத்து தெரிவித்தார். அதிமுகவின் 46வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதிமுக டி.டி.வி. தினகரன் அம்மா அணி சார்பில் சென்னை அடுத்த ஆவடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு பேச்சாளராக கழக பேச்சாளர் சி.ஆர்.சரஸ்வதி கலந்துகொண்டார் அப்போது பேசிய அவர் எல்லாவற்றையும் மோடி பார்த்து கொள்வார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அதிமுக வரலாற்றில் ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர்தான் வந்திருக்கிறாரே தவிர ஜெயலலிதா டெல்லி சென்றதில்லை எனவும், மோடியா இல்லை லேடியா என கேட்டவர்தான் ஜெயலலிதா எனவும் குறிப்பிட்டார். அவர் உயிருடன் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி. மற்றும் நீட் என ஒன்று நிச்சயம் வந்திருக்காது எனவும் தெரிவித்தார். பொதுக்கூட்டத்தில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Label