OUR CLIENTS
உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட், பேனர் வைக்க தடை! : உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட், பேனர் வைக்க தடை! : உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு Posted on 25-Oct-2017 உயிரோடு இருப்பவர்களுக்கு  கட்அவுட், பேனர் வைக்க தடை! : உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை, அக்.25-
போக்குவரத்திற்கு இடையூராக கட் அவுட், பேனர் வைப்பதற்கு கட்டுப்பாடுகளும், உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட் பேனர் வைக்க தடை விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்‌ஷனா குமாரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி வைத்திய நாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக கட் அவுட் மற்றும் பேனர் வைப்பது கன்காணிக்கப்பட வேண்டும் என நீதிபதி கூறினார்.

மேலும், உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைப்பதற்கு தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார். 1959-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை அவ்வப்போது திருத்தவும் தமிழக தலைமைச் செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளில் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது எனவும், உள்ளாட்சி அமைப்புகள் சுகாதாரமான  சூழ்நிலையை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Label