OUR CLIENTS
டெங்கு, லஞ்சத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு
டெங்கு, லஞ்சத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு Posted on 25-Oct-2017 டெங்கு, லஞ்சத்தில்  தமிழகம் முதலிடம் வகிக்கிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை, அக்.25-
டெங்கு, லஞ்சத்தில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் கரும்புக்கான ஆதார விலையுடன், தமிழக அரசு டன்னுக்கு ரூ.350 கூடுதல் விலை வழங்கப்படும் என கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தும், தனியார் சர்க்கரை ஆலைகள் 4 ஆண்டுகளாகவும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 2 ஆண்டுகளாகவும் விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

ஆகவே, சர்க்கரை ஆலைகளைக் கண்டித்தும், இதனை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்தும், நிலுவைத் தொகை வழங்கக் கோரியும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் தேமுதிக சார்பில், அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், கரும்பு விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.  அப்போது பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் முதலிடம் வகிப்பது டெங்குவும், லஞ்சமும்தான் என்று குற்றஞ்சாட்டினார்.
கந்துவட்டியை ஒழிக்க அரசு தவறிவிட்டது என விமர்சித்த அவர் இரட்டை இலை சின்னம் முடங்க காரணமான ஓபிஎஸ்சுடன் ஈபிஎஸ் இணைந்துள்ளார் என்று விஜயகாந்த் கூறினார்.

Label