OUR CLIENTS
திருட்டுத்தனமாக குடிநீருடன் கழிவுநீரை கலக்கும் ஆர்.சி.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம்!
திருட்டுத்தனமாக குடிநீருடன் கழிவுநீரை கலக்கும் ஆர்.சி.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம்! Posted on 26-Oct-2017 திருட்டுத்தனமாக குடிநீருடன் கழிவுநீரை கலக்கும் ஆர்.சி.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம்!

சென்னை, அக்.26-
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் ஆர்.சி. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் குடிநீருடன் கழிவுநீரை கலந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

நீரின்றி அமையாது உலகு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நீரின்றி எந்த பணியையும் இன்றை காலகட்டத்தில் செய்ய முடியாது. இப்படி நிலைமை இருந்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீரை தேடி பொதுமக்கள் சாலைகளில் அலைந்து திரிவதை எப்போதும் பார்க்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில் திருமுல்லைவாயல் பகுதியில் ஆர்.சி. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு சேகரமாகும் கழிவுநீரை இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக யாருக்கும் தெரியாமல் மழைநீர் செல்லும் கால்வாயில் திறந்து விடப்படுகிறது. இந்த கழிவுநீர் சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இதனால் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை பல்லாங்குழியாக மாறியுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்புடைய துறை அதிகாரிகள் அலட்சியப் போக்கையே கையாண்டு வருகின்றனர். இந்த ஆர்.சி.கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் திறந்துவிடும் கழிவுநீர் புழல் ஏரியில் கலந்து மக்கள் குடிநீராக பயன்படுத்தும் தண்ணீரை நச்சு கொண்டதாக மாற்றுகிறது. இது இரவு நேரங்களில் அரங்கேற்றப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பொதுநலம் குறைந்து சுயநலம் அதிகரித்து விட்டது இதுபோன்ற சமூக விரோதிகளுக்கு என்றுதான் சொல்ல வேண்டும். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நகராட்சி நிர்வாகம் கை கட்டி வேடிக்கை பார்ப்பதுடன் அந்த நிறுவனத்திடம் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொண்டு வாலாட்டுகின்றனர். இதுபோன்று மக்கள் மீதும் அவர்கள் நலன் மீதும் கவனம் செலுத்த வேண்டியவர்கள் தங்கள் பார்வையை ப -வைட்டமின் மீது செலுத்துவதால் இதுபோன்ற தவறுகள் தாராளமாக நடக்கிறது. ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும் என்று சொல்லுவத்கு ஏற்ப தவறு செய்பவருக்கு வாய்ப்பு வழங்குவதால் அவர் மேலும் தவறு செய்ய தூண்டப்படுகிறார் என்றே சொல்லலாம். 

இப்படி அராஜக பேர்வழிகளுக்கு அரசு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.இவரது நிறுவனத்துக்கு அரசு வழங்கியுள்ள மின்சாரம், குடிநீர் இணைப்புகளை உடனடியாக முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் போர்க்கால அடிப்படையில் துண்டிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சமூக விரோதிகள் மக்கள் நலனில் அக்கரை செலுத்துவார்கள். மக்கள் பயன்படுத்தும் குடிநீரை பாழாக்கும் இதுபோன்ற பஞ்சமா பாதகர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். 

இதற்கு உச்சபட்ச தண்டனையை சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர்கள் வழங்கி இதுபோன்ற சமூக விரோதிகளை தண்டிக்க வேண்டும். இவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இதைப்பார்த்து வேறு யாரும் இதுபோன்ற பஞ்சமா பாதக செயலில் ஈடுபட அச்சப்பட வேண்டும். பொதுமக்கள் வாழ்க்கையில் விளையாட நினைக்கும் கல்மனம் படைத்தவர்களுக்கு கடும் சாட்டையடியாக இது விளங்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் என்னதான் நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label