OUR CLIENTS
ஜெயலலிதாவைப் பின்பற்றி நெய்வேலி நிறுவனப் பங்குகளை தமிழக அரசே வாங்க வேண்டும் - பழ.நெடுமாறன் வேண்டுகோள்
ஜெயலலிதாவைப் பின்பற்றி நெய்வேலி நிறுவனப் பங்குகளை தமிழக அரசே வாங்க வேண்டும் - பழ.நெடுமாறன் வேண்டுகோள் Posted on 26-Oct-2017 ஜெயலலிதாவைப் பின்பற்றி நெய்வேலி நிறுவனப்  பங்குகளை தமிழக அரசே வாங்க வேண்டும்  - பழ.நெடுமாறன் வேண்டுகோள்

சென்னை, அக்.26-
ஜெயலலிதாவைப் பின்பற்றி நெய்வேலி நிறுவனப் பங்குகளை தமிழக அரசே வாங்க வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தின் 15% பங்குகளை தனியாருக்கு விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சோசலிசத் திட்டத்தின்படி பொதுத்துறை நிறுவனங்கள் அரசால் அமைக்கப்பட்டன. ஆனால், அவைகளை சிறிது சிறிதாக தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் அமைந்திருக்கும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் தமிழர்களுக்கே சொந்தமானது. இதை நிலை நிறுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படவேண்டும். 2013-ம் ஆண்டில் நெய்வேலி நிறுவனத்தின் 5% பங்குகளை மத்திய அரசு விற்க முயன்றபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்வந்து அந்தப் பங்குகளை தமிழக அரசை வாங்கச் செய்தார். அதைப்போல இப்போதும் இந்த 15% பங்குகளை தமிழக அரசிடமே மத்திய அரசு விற்க வேண்டும். அந்தப் பணத்தை தவணை முறைகளில் மத்திய அரசு பெற வேண்டும். வேறு எந்த தனியாருக்கும் இந்தப் பங்குகளை விற்கக்கூடாது என வலியுறுத்துகிறேன். 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் பின்பற்றி தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெய்வேலி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்‘’ என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Label