OUR CLIENTS
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதான வழக்கை பாஜக வாபஸ் பெற வேண்டும்: தி.வேல்முருகன்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதான வழக்கை பாஜக வாபஸ் பெற வேண்டும்: தி.வேல்முருகன்! Posted on 26-Oct-2017 விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதான வழக்கை பாஜக வாபஸ் பெற வேண்டும்: தி.வேல்முருகன்!

சென்னை, அக்.26-
பொய்யான காரணங்களைக் கற்பித்து கைது செய்துள்ள வி.சி.கட்சியினர் மீதான வழக்கை வாபஸ் பெற்று உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’ பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும், போராடி வரும் எதிர்க்கட்சிகளின் மேல் பாய்கிறது தமிழக பாஜக. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது படையெடுப்பே நடத்தி தாக்குதலே தொடுத்திருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் கட்சியினரையும் தனிநபர் தாக்குதலில் இறங்கி அவதூறுச் சேற்றை அவர்கள் மேல் வாரியிறைத்திருக்கிறார். வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பான, இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார்.

கரூரில், தமிழிசையின் தரம் தாழ்ந்த பேச்சிற்கு ஜனநாயக முறையில், அறவழியில் எதிர்ப்பு தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது பாஜகவினர் காவல்துறையினர் முன்னிலையிலேயே கண்மூடித்தனமாக தாக்கியிருக்கின்றனர். வாகனங்களைத் தகர்த்திருக்கின்றனர்.

ஆனால் இதையெல்லாம் அப்படியே தலைகீழாக மாற்றி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரே வன்முறை செய்ததாக அவர்களையே கைது செய்து வழக்கு போட்டிருக்கின்றனர்.

அறவழியில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை பாஜகவினர் தாக்கியதை வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

பொய்யான காரணங்களைக் கற்பித்து கைது செய்துள்ள வி.சி.கட்சியினர் மீதான வழக்கை பாஜக வாபஸ் பெற்று உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தமிழ்த்தேசியக் கட்சிகள் மீது தமிழக பாஜக படையெடுக்க வேண்டாம்‘’ என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

Label