OUR CLIENTS
காசிமேடு மீனவர்கள் போராட்டம் என்பது திட்டமிட்ட சதி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
காசிமேடு மீனவர்கள் போராட்டம் என்பது திட்டமிட்ட சதி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு Posted on 26-Oct-2017 காசிமேடு மீனவர்கள் போராட்டம் என்பது திட்டமிட்ட சதி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை, அக்.26-
காசிமேடு மீனவர்கள் போராட்டம் என்பது திட்டமிட்ட சதி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள், சட்டங்கள், அரசு ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அவை குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்தும் பயிற்சி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தலைமை செயலக ஊழியர்களுக்கு அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் அண்ணா இன்ஸ்டிடியூட் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழகத்தில் இருந்து 621 பேர் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மீனவர்கள் போராட்டம் என்பது திட்டமிட்ட சதி. பெரிய விசைப்படகுகள், சிறிய விசைப்படகுகள், கண்ணாடி இழை கட்டு மரங்கள் மற்றும் கட்டு மரங்கள் என 4 பிரிவுகள் இருக்கிறது. பெரிய விசைப்படகு வைத்திருப்பவர்களுக்கும், சிறிய விசைப்படகுகள் வைத்திருப்பவர்களுக்கும் அண்ணன்-தம்பி பிரச்சனை போல உள்ளது. இதை தீர்த்துக் கொள்ள பல சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

ஒரு கட்டத்தில் சீன என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளில் அதை நீக்க வேண்டும் என்று சொன்ன போது உடனடியாக நாங்கள் மீன்வளத்துறை இயக்குனர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் அந்த என்ஜின்கள் எடுக்கப்பட்டுவிட்டன. எடுப்பதற்கு அந்த படகுகள் பிடிக்கப்பட வேண்டும் என்று போராட்டம் ஏற்படுவதற்கு முன்தினமே நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலையில் மறுநாள் வந்து வேண்டுமென்றே சாலை மறியல் செய்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் எல்லோருமே ஒன்று கூடி, இன்னும் சில சமூக விரோதிகளும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள்.

புரட்சித் தலைவி அம்மா ஏற்கெனவே ரூ.11 கோடி செலவில் மீன் விற்க மார்க்கெட் கட்டி கொடுத்திருக்கிறார். அந்த மார்க்கெட்டில் மீனை விற்றால் நல்ல விலை போகும் மீனவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில் மீன் மார்க்கெட் கோர்ட்டு உத்தரவின் மூலம் மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது.  இதில் சில பேர் ரவுடி மாமூல் 1 நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை மீன் விற்கும் ஏழை பெண்களிடம் கூடைக்கு இவ்வளவு என்று வசூல் செய்தனர். இதை நாங்கள் தடுத்தோம். அந்த ரவுடிகளும், தி.மு.க.- தினகரன் அணியினரும் ஒன்று சேர்ந்து ஒரு தலையில்லாத போராட்டத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

மக்களுக்கு என் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு அவர்கள் செய்த சதியின் காரணமாக இந்த அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டன. அதற்கு ஆதாரமாக அவர்கள் கலவரத்தின் போது விட்டுச் சென்ற ஸ்டாலின் படம் போட்ட பைக்கை போலீஸ் நிலையம் மூலம் பறிமுதல் செய்து வைத்துள்ளோம். தி.மு.க. வினரின் மற்றொரு மைக்கும் சிக்கியுள்ளது.  அமைதியான இடத்தில் பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்த பஸ் மீது கல் வீசினார்கள். ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் கொண்டு வேண்டுமென்றே கலவரத்தை தூண்டுகின்ற வகையில் இதை செய்திருக்கிறார்கள் என்பது நமது மீனவ மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக இந்த ஆதாரம் எடுக்கப்பட்டது. இந்த பைக்குகள் போலீஸ் நிலையத்தில் உள்ளன.

தி.மு.க., காங்கிரஸ், தினகரன் அணி மற்றும் மாமூல் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த சதி செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆட்களை பணம் கொடுத்து அழைத்து வந்து இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். தவறு செய்தவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது அங்கு சகஜமான நிலை திரும்பி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்

Label