OUR CLIENTS
திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மக்களுக்காக தியாகம் செய்யும் கட்சி அதிமுக!
திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மக்களுக்காக தியாகம் செய்யும் கட்சி அதிமுக! Posted on 27-Oct-2017 திருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மக்களுக்காக தியாகம் செய்யும் கட்சி அதிமுக!

திருச்சி, அக்.27-
அதிமுக மக்களுக்காக உழைக்கும், தியாகம் செய்யும் கட்சி என திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி பேசியதாவது:
அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வின் முதல் அத்தியாயத்திலும், இரண்டாவது அத்தியாயத்திலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அதிக இடத்தைப் பிடித்திருக்கிறது. அந்த மகத்தான தலைவர்களின் வழியில் மூன்றாம் அத்தியாயமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நாங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை அத்தலைவர்களின் எண்ணத்தையும் உங்கள் விருப்பத்தையும்  மனதில் வைத்துத்தான் திட்டங்கள் வகுத்திருக்கிறோம். அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு அரசு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன. 

ஏனென்று சொன்னால் இதை இந்த நேரத்திலே சொல்வது பொறுத்தமாக இருக்குமென்று கருதுகின்றேன். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியிலே என்ன திட்டம் மக்களுக்கு கிடைத்திருக்கின்றது, என்ன நன்மை கிடைத்திருக்கின்றது என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கின்றார். செய்தியாளர்களிடம் பேட்டி கொடுக்கின்றபொழுது நம்முடைய கட்சி பற்றியும், ஆட்சி பற்றியும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார். அதேபோல, எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இதைப்பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். 

ஆகவே, அவர்களுக்கெல்லாம் சொல்லிக்கொள்வதற்காக இன்றைக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலே மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடைய ஆட்சியில் நடைபெறுகின்ற பணிகளை சொல்கின்றோம், அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று இந்தத் தருணத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன். 14 ஆயிரத்து 26 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான41 ஆயிரத்து 692 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   அனைத்திந்திய அண்ணா தி.மு.க. மக்களுக்காக உருவான கட்சி.. மக்களுக்காக உழைக்கும் கட்சி.. மக்களுக்காகவே தியாகம் செய்யும் கட்சி. 

 புதிய அறிவிப்புகள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு புதிய ஒருங்கிணைந்த   பேருந்து நிலையம்.  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை   மூலம் கட்டப்படவிருக்கும் பாலங்கள்: திருச்சி-சிதம்பரம் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கல்லக்குடி  - தாப்பாய் சாலையிலுள்ள காட்டாற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்படும். ஏரகுடி-மகாதேவி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும். துலுக்கம்பட்டி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும். தண்டலை-திருத்தலையூர் சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.சமயபுரம் - கீழக்கண்ணுகுளம் (வழி) மண்ணச்சநல்லூர் - திருப்பஞ்சிலி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும். துவரங்குறிச்சி-அடைக்கம்பட்டி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும். இலுப்பூர்-வளநாடு சாலையில் ஒரு பாலம்  புடலாத்தி-மாராடி-கோட்டப்பாளையம் சாலையில் ஒரு பாலம் கட்டப்படும். கொப்பம்பட்டி   விஸ்வாம்பாள் சமுத்திரம் சாலையில் ஒரு பாலம் கட்டப்படும். பைத்தம்பாறை-சேருகுடி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும். வாளவந்தி-துலையாநத்தம் (வழி) மங்களம் சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.

கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  மற்றும் லால்குடி, முசிறி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் மற்றும் துறையூர் மருத்துவமனைகளில் மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதலுதவி அளிக்க ஏதுவாக மாரடைப்பு சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.  

கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  மருந்து எதிர் வீரிய காச நோய் வார்டு ஏற்படுத்தப்படும். திருச்சிராப்பள்ளி நகரில் ஒரு புதிய மருந்து கிடங்கு அமைக்கப்படும்.

மணப்பாறை அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், ஆய்வக கருவிகள், டயாலிசிஸ் கருவி, எண்டோஸ்கோப் கருவி, புற்றுநோயாளி கீமோதெரபி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மணப்பாறை வட்டத்தில் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவை திட்டம் செயல்படுத்தப்படும். இனாம்குளத்தூர் வட்டத்தில் கண் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும். நாவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பல் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும். இவ்வாறு, முதல்வர் எடப்பாடி  பழனிசாமி கூறினார்.
                        



Label