OUR CLIENTS
ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் வாயிலாக விரைவில் கிளைமேக்ஸ் : தங்க தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி
ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் வாயிலாக விரைவில் கிளைமேக்ஸ் : தங்க தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி Posted on 27-Oct-2017 ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் வாயிலாக விரைவில் கிளைமேக்ஸ் : தங்க தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி

சேலம், அக்.27-
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்படுவது உறுதி என்றும், அமைச்சர்கள் உள்பட 25 சீலீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் மூலம் விரைவில் கிளைமேக்சை அரங்கேற்ற உள்ளதாகவும் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

சேலம் தாதகாப்பட்டியில் அ.தி.மு.க. 46-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் நடந்தது. இந்த கூட்டத்தில், எம்.எல்.ஏ. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டவரும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளருமான தங்கத்தமிழ்செல்வன் பங்கேற்று பேசினார்.

முன்னதாக தங்கதமிழ்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ்.-&இ.பி.எஸ். அணிக்கு கிடைக்கக்கூடாது என்று நாங்கள் யாரும் தடுக்கவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.(அம்மா அணி), அ.தி.மு.க.(புரட்சித்தலைவி) அணி என இரண்டாக பிரிந்தது.

நாங்கள் அதிமுக(அம்மா) அணியில் இருக்கிறோம். பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் உள்ளனர். டி.டி.வி.தினகரன் தரப்பில் தேர்தல் கமி‌ஷனில் ஆவணங்கள் தாக்கல் செய்தவர்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் என 7 லட்சம் பேர் பொதுச்செயலாளராக சசிகலாவை ஏற்று தேர்தல் ஆணையத்தில் முதலில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் போட்டு, 1,118 பேர் அபிடவிட் தாக்கல் செய்து இரட்டை இலையை கேட்கிறார்கள். அதில் 116 பேரின் அபிடவிட் போலியானவை. எனவே, அதை முதலில் விசாரிக்க தேர்தல் கமி‌ஷனிடம் மனு கொடுத்தோம். அதன் பின்னரே இரட்டை இலை சின்னம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம்.
இரட்டை இலை தொடர்பான விசாரணை வருகிற 30-ம் தேதி வருகிறது. அன்றைக்கு முடிவு வந்தாலும் சரி, அதன் பின்னர் வேறு தேதியில் முடிவு வந்தாலும் நியாயமாக தேர்தல் ஆணையம் விசாரித்தால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.

இரட்டை இலை கிடைக்கவில்லை என்றால் சுப்ரீம் கோட்டை நாடுவதை தவிர வேறு வழியில்லை. அமைச்சர் ஜெயக்குமார் தனது நிலைப்பாட்டை மறந்து பேசுகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ.விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்கிறோம்.

காரணம் அவர் மருத்துவமனையில் இருந்த போது முதல்வர் பொறுப்பில் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா தன்னை சுய நினைவோடு அழைத்து முதல்வர் பொறுப்பை ஏற்க சொன்னார் என கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். அதனால் முதலில் ஓ.பன்னீர்செல்வத்தை தான் விசாரிக்க வேண்டும். அவருக்கு பதவி கிடைத்ததும் தர்ம யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. முதல்வர், துணை முதல்வர் இடையே போட்டி பொறாமை உள்ளது. அவர்கள் அணியில் ஜெயக்குமார், மதுசூதனன் என பல பிரச்சினைகள் இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றும் படத்தின் இடை வேளை முடிந்து விட்டது. கிளை மேக்சை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அவர்கள் பக்கம் தற்போது உள்ளவர்களில் அமைச்சர்கள் உள்பட 25 எம்.எல்.ஏ.க்கள் சிலீப்பர் செல்களாக இருக்கின்றனர். இந்த உண்மை. விரைவில் அவர்கள் மூலம் கிளேமேக்சை அரங்கேற்றுவோம். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

நான் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் 2-ம் தேதி நல்ல தீர்ப்பு கிடைக்கும். எங்களுக்கு பதவி கிடைக்கிறதோ, இல்லையோ ஒ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேரின் பதவி பறிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம், தலைமை கழக பேச்சாளர்கள் தாராபுரம் முத்துமணிவேல், வேங்கை சந்திரசேகரன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர். இதில் மாணவரணி செயலாளர் டாக்டர் சசிகுமார், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் சுருளிவேல், பகுதி செயலாளர்கள் கோபால், தம்பி.ஜெ. ஜெயக்குமார், செங்கோட்டுவேலவன், சித்தானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Label