OUR CLIENTS
சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்த போலீசாருக்கு ஆப்பு : போலீஸ் அதிகாரிகள் காரையும் திரும்ப பெற்று கமிஷனர் அதிரடி!
சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்த போலீசாருக்கு ஆப்பு : போலீஸ் அதிகாரிகள் காரையும் திரும்ப பெற்று கமிஷனர் அதிரடி! Posted on 27-Oct-2017 சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில்  செய்த போலீசாருக்கு ஆப்பு : போலீஸ் அதிகாரிகள் காரையும் திரும்ப பெற்று கமிஷனர் அதிரடி!

சேலம், அக்.27-
சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் பணி என்ற பெயிரில், சொந்த பணிகளில் ஈடுபட்டு வந்தவர்களுக்கும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டு, லூட்டி அடித்தவர்களுக்கு, போலீஸ் கமிஷனர் ஆப்பு வைத்துள்ளார். அதிகாரிகள் பயன்படுத்திய கார்களை திரும்ப பெற்றுள்ளார். இந்த போலீசார் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

சேலம் மாநகரில் உள்ள, 14 போலீஸ் ஸ்டேஷன்கள், சிறப்பு பிரிவுகள், ஆயுதப்படைகளில், 2,400 பேருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 1,465 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில், ஆயுதப்படையில் பணியில் உள்ள, 334 பேரில், 134 பேருக்கு அதிகாரிகள் வீடுகள் உட்பட பிற பணிகள் வழங்கப்பட்டு வந்தன. பணியில் உள்ளவர்களில், 15 சதவீதத்தினர், விடுப்பில் சென்று விடும் நிலையில், பற்றாக்குறை அதிகரித்து, பணிச்சுமையால் போலீசார் அவதிக்குள்ளாகினர்.சேலம் மாவட்டத்தில் இருந்து, வீராணம், இரும்பாலை, கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்கள், கடந்த, 2013ல், மாநகருடன் இணைக்கப்பட்ட நிலையில், அந்த ஸ்டேஷன்களுக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வில்லை. பற்றாக்குறையால், ரோந்து பணி மட்டுமின்றி, குற்றச்செயல்கள் தடுப்பு, குற்றவாளிகள் கைது உட்பட அனைத்து பணிகளிலும் தொய்வு ஏற்பட்டு வந்தது. கடந்த அக்.,11ல் சேலம் போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்ற சங்கர், பற்றாக்குறையை போக்கும் வகையில், அதிரடியை துவக்கி உள்ளார். சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுப்புலட்சுமியின், பங்களா, அலுவலகத்தில், தலா, ஆறு போலீசார் பணியாற்றி வந்த நிலையில், வீட்டுக்கு நான்காகவும், அலுவலகத்துக்கு, இரண்டாகவும் குறைக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு துணை கமிஷனர் தங்கதுரையின் வீடு, அலுவலகங்களில் தலா, நான்கு பேர் பணியில் இருந்த நிலையில், தலா இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் தேவை இல்லாமல், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என, 14 பேருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலக தோட்ட பராமரிப்பில் ஈடுபட்டு வந்த, மூன்று பேருக்கு ஸ்டேஷன் பணி ஒதுக்கப்பட்டு, தோட்ட பராமரிப்பு பணி ஊர்க்காவல் படையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. பிற பணிகளில் ஈடுபட்டு வந்த, 35 பேர் மாநகர ஆயுதப்படையில் இணைந்துள்ள நிலையில், மேலும், 40 பேர் விரைவில் இணைய உத்தரவிடப்பட்டுள்ளது. கமிஷனருக்கு பாதுகாப்பு வழங்கி வந்த (கன்மேன்) பாதுகாவலர் இருவரை, அவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்ட ஸ்டேஷனில் பணியாற்ற திருப்பி அனுப்பி உள்ளார்.

அதிரடி துவங்கி உள்ள நிலையில், முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், நேற்று தான் போலீஸ் பங்களாவை காலி செய்துள்ளார். விரைவில், அங்கு கமிஷனர் சங்கர் குடியேற உள்ளார். பங்களாவில் பணியாற்றி வரும், எட்டு பேரில், நான்கு பேர் மீண்டும் பழைய இடத்துக்கு பணி மாற்றம் செய்ய கமிஷனர் திட்டமிட்டுள்ளார். அதிகாரிகளின் பங்களாக்கள், அலுவலகங்களில் பணியாற்றிய போலீசார் திரும்ப பெறப்பட்டு, சூரமங்கலம், கன்னங்குறிச்சி, டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில், 24 மணி நேரமும், தலா, 10 பேர் தயார் நிலையிலும், கமிஷனர் அலுவலகத்தில் உள்ள வாகனத்தில், 15 பேர் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.வாகன பற்றாக்குறையை களையும் வகையில், சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர், குற்றப்பிரிவு துணை கமிஷனர் பயன் படுத்திய அம்பாசிடர் கார்களை திரும் பெற்று, அவற்றை அதிகாரிகளின் பயன் பாட்டுக்கு வழங்கி உள்ளார். உதவி கமிஷனர்களின் வீடுகள், அலுவலகங்களில் பணியாற்றும் போலீசார் குறித்த கணக்கெடுப்பு மேற் கொள்ளப்பட்டு, அங்கு வீட்டு வேலை செய்து வரும் போலீசார் திரும்ப பெறப்பட உள்ளனர். போலீஸ் கமிஷனரின் இந்த அதிரடி, இது நாள் வரை, அதிகாரிகளின் பங்களாக்கள், அலுவலகங்களில் பணியாற்றுகிறோம் என்ற பெயரில், சொந்த வேலை, ரியல் எஸ்டேட் உட்பட பிற தொழில்களில் ஈடுபட்டு வந்த போலீசார் மத்தியில், பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Label