OUR CLIENTS
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்திக்கு ஜி.கே.மணியின் தீபாவளி வாழ்த்து!
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்திக்கு ஜி.கே.மணியின் தீபாவளி வாழ்த்து! Posted on 27-Oct-2017 மறைந்த வாழப்பாடி ராமமூர்த்திக்கு  ஜி.கே.மணியின் தீபாவளி வாழ்த்து!

சேலம், அக்.27-
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் மறைந்த, காங்., மூத்த தலைவர், வாழப்பாடி ராமமூர்த்திக்கு, தீபாவளி வாழ்த்து தெரிவித்து, பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி தபால் அனுப்பியது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர், வாழப்பாடி ராமமூர்த்தி; தமிழக, காங்., தலைவர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தவர்; 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

அவரது சேலம் முகவரிக்கு, பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி கையெழுத்துடன், தீபாவளி வாழ்த்து தபால் வந்துள்ளது. தபால் மேல் உறையில், பெறுநர் இடத்தில், ‘மாண்புமிகு, கே.ராமமூர்த்தி - சுயேச்சை’ என, குறிப்பிடப்பட்டு உள்ளது. வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன், ராம சுகந்தன், தன், ‘பேஸ்புக்‘ பக்கத்தில், ‘15 ஆண்டுகளுக்கு முன் மறைந்த, என் தந்தையாருக்கு, இந்த ஆண்டு தீபாவளி நல்வாழ்த்துகள் அனுப்பிய, ஜி.கே.மணிக்கு நன்றி’ என, பதிவு செய்துள்ளார்.

ஜி.கே.மணி கூறுகையில், ‘’தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள், நெருக்கமானவர்களுக்கு, தீபாவளி வாழ்த்து அனுப்பினேன். ‘’வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன், ராம.சுகந்தனுக்கு வாழ்த்து தபால் அனுப்பும்படி, உதவியாளர்களிடம் கூறினேன். தவறுதலாக, வாழப்பாடி ராமமூர்த்தி பெயருடன் அனுப்பி விட்டனர்,’’ என்றார்.

Label