OUR CLIENTS
சசிகலாவால் நியமிக்கப்பட்டவரிடம் தங்க கவசத்தை வழங்க வேண்டும்: டி.டி.வி தினகரன் கடிதம்
சசிகலாவால் நியமிக்கப்பட்டவரிடம் தங்க கவசத்தை வழங்க வேண்டும்: டி.டி.வி தினகரன் கடிதம் Posted on 27-Oct-2017 சசிகலாவால் நியமிக்கப்பட்டவரிடம் தங்க கவசத்தை வழங்க வேண்டும்: டி.டி.வி தினகரன் கடிதம்

சென்னை, அக்.27-
முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்காக மதுரை மேலூர் வங்கியில் உள்ள தங்க கவசத்தை சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. குருபூஜை தவிர மற்ற நாட்களில் இந்த கவசமானது மதுரை மேலுரில் உள்ள ஒரு வங்கியில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் குருபூஜை நடைபெற உள்ளதால் தங்க கவசமானது அதிமுக.வில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அந்த கட்சி இரு பிரிவாக உள்ளதால் யாரிடம் வழங்குவது என்ற குழப்பத்தில் அளிக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், டிடிவி தினகரன் வங்கி மேலாளருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், சசிகலாவால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் ரங்கசாமியிடம் தான் தங்க கவசத்தை வழங்க வேண்டும். குருபூஜை முடிந்த பின்னர் நவம்பர் முதல் தேதி கவசம் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Label