OUR CLIENTS
உலக அமைதியின் தூதுவராக இந்தியா திகழ்கிறது : மான்கி-பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்
உலக அமைதியின் தூதுவராக இந்தியா திகழ்கிறது : மான்கி-பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம் Posted on 30-Oct-2017 உலக அமைதியின் தூதுவராக இந்தியா திகழ்கிறது  : மான்கி-பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, அக்.30-
உலக அமைதியின் தூதுவராக இந்தியா திகழ்கிறது என மான் கீ பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வானொலி மூலம் உரையாற்றுவார். நேற்று பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர் பேசினார். குறிப்பாக காஷ்மீரில் இந்தாண்டு தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடியது மறக்க முடியாத அனுபவத்தை தந்தது என பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது:-  மான் கி பாத் எனப்படும் வானொலி நிகழ்ச்சியில் பேசிய அவர், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையின் மூலம் அமைதியை உலகிற்கு இந்தியா கூறி வருவதாக தெரிவித்தார். ஐ.நா.வின் அமைதிகாப்பு பணிக்காக இந்தியா இதுவரை 18 ஆயிரம் ராணுவ வீரர்களின் பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், தற்போது 7 ஆயிரம் வீரர்கள் ஐ.நா. அமைதிகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது உலகின் மூன்றாவது ராணுவ பங்களிப்பாகும். நம் வீரர்களின் கதைகளை பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். ஐ.நா. அமைதிகாப்பு பணிக்கு அதிக வீரர்களை பங்களித்துள்ள நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் இருப்பதாகவும்,  இந்தியா உலகிற்கு அமைதி, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை அளித்து வருகிறது. ஐ.நா மனித உரிமைகளின் பாலின சமத்துவத்திற்கான அறிவிப்பு இந்தியாவின் உந்துதலுக்கு ஒரு சாட்சியாகும்.

மேலும் இந்தியாவின் இறையாண்மையை மதிக்கும் பண்பு, காதி நிறுவனத்தின் வருமானத்தை அதிகப்படுத்தும் வழிமுறைகள், தூய்மை இந்தியா ஆகியவற்றையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.  நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அதோடு குழந்தைகள் சிறுவயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாவதையும் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும் என்றும் உறுதியளித்தார். புதிய இந்தியாவின் தலைவர்களாக குழந்தைகள் இருப்பார்கள்.    நோயைத் தடுக்கவும், நோய்களுக்கு எதிராக போராடவும் இளைஞர்களுக்கு யோகா உதவும் என்றும் கூறிய பிரதமர் மோடி, சுயநலமற்று, மனிதநேயத்துடன் உதவும் மக்களால் இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
 
ராணுவம் மற்றும் விளையாட்டு வீரர்களால் தேசத்துக்கு பெருமை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஹாக்கி அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  டென்மார்க் ஒபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஸ்ரீகாந்த்க்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இளம் கால்பந்து வீரர்கள் நம் மனதை வென்று விட்டனர். இந்தியாவில் கால்பந்துக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.  இந்தியாவில் நடக்கவிருக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Label