OUR CLIENTS
பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி
பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி Posted on 12-Aug-2016 பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி

ரியோ:
ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கடம்பி எச் பிரிவில் இடம் பெற்று உள்ளார். அவர் தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ வீரர் லினோ முன்ஹெசுடன் மோதினார். இதில் அவர் 21-11, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 2-வது ஆட்டத்தில் சுவீடன் வீரர் ஹென்ரியுடன் 14-ந் தேதி மோதுகிறார்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி. சிந்து ஆகியோர் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் ஜூவாலா கட்டா- அஸ்வினி ஜோடி ஜப்பான் ஜோடியிடம் தோல்வி கண்டது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான அனுஅட்ரி-சுமித் ரெட்டி முதல் சுற்றில் தோற்றது.

Label