OUR CLIENTS
இந்திரா காந்தி நினைவு தினம் : பிரதமர் மோடி, ராகுல் உட்பட பல தலைவர்கள் மரியாதை
இந்திரா காந்தி நினைவு தினம் : பிரதமர் மோடி, ராகுல் உட்பட பல தலைவர்கள் மரியாதை Posted on 01-Nov-2017 இந்திரா காந்தி நினைவு தினம் : பிரதமர் மோடி, ராகுல் உட்பட பல தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி, நவ.1-
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி  பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி , முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.  

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய 33வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.  பாகிஸ்தானை வென்று வங்காளதேசம் எனும் புது நாட்டை உருவாக்கியது, முக்கிய உளவு அமைப்பான ரா-வை உருவாக்கியது என இந்திரா காந்தி தனது பதவிக்காலத்தில் சிறப்பான பல சாதனைகளை செய்துள்ளார். 

 இந்நிலையில், இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி  நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். டெல்லியில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

ராகுல்காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் இந்திரா காந்தியின் படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். படத்தின் மேலே ‘மன்னித்தல் துணிச்சலின் ஒரு பகுதியாகும்’ என்ற இந்திரா காந்தியின் புகழ்பெற்ற வசனத்தை பதிவு செய்திருந்தார்.

Label