OUR CLIENTS
சர்தார் வல்லபாய் பட்டேலின் 142வது பிறந்தநாள் விழா: இந்திய நாட்டுக்கு அளித்த பங்களிப்புகளை சில கட்சிகளும், அரசுகளும் மூடி மறைக்க முயற்சித்தன
சர்தார் வல்லபாய் பட்டேலின் 142வது பிறந்தநாள் விழா: இந்திய நாட்டுக்கு அளித்த பங்களிப்புகளை சில கட்சிகளும், அரசுகளும் மூடி மறைக்க முயற்சித்தன Posted on 01-Nov-2017 சர்தார் வல்லபாய் பட்டேலின் 142வது பிறந்தநாள் விழா:  இந்திய நாட்டுக்கு அளித்த பங்களிப்புகளை சில கட்சிகளும், அரசுகளும் மூடி மறைக்க முயற்சித்தன

புதுடெல்லி, நவ.1-
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 142வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வல்லபாய் பட்டேல் சிலைக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

டெல்லி மேஜர் தயான் சந்த் மைதானத்தில் இருந்து ஒற்றுமை ஓட்டம் ஒன்றை பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் சர்தார் சிங், தீபா கர்மாகர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் கலந்து கொண்டனர். 

பட்டேல் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:  வல்லபாய் பட்டேல் இந்திய நாட்டுக்கு அளித்த பங்களிப்புகளை சில கட்சிகளும், அரசுகளும் மூடி மறைக்க முயற்சித்தன. ஆனால் எந்த முயற்சிகளாலும் அவரை மறக்கடிக்க இயலாது. ஏனெனில் இந்த நாட்டின் இளைஞர்கள் வல்லபாய் பட்டேலை மறக்க மாட்டார்கள். இந்த தேசத்துக்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்கு இந்தியாவின் இளைஞர்கள் அவருக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

குஜராத்தில் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பட்டேல் சமூகத்தினருக்கு அதிக வாக்குகள் உள்ளன. அவர்களைக் கவர்வது போல் பிரதமரின் பேச்சு இருந்தது.

இந்தியாவை ஒருங்கிணைக்க பட்டேல் அளித்த பங்களிப்புகளைப் புகழ்ந்து குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு பேசினார்.   காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மரியாதை செலுத்தி உள்ளார்.
இந்தியாவை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவரான வல்லபாய் பட்டேலுக்கு மரியாதை செலுத்துவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Label