OUR CLIENTS
மோடியின் வெளிநாட்டு பயண நன்மைகளை அளவிட முடியாது - ஆர்.டி.ஐ. கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்
மோடியின் வெளிநாட்டு பயண நன்மைகளை அளவிட முடியாது - ஆர்.டி.ஐ. கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில் Posted on 01-Nov-2017 மோடியின் வெளிநாட்டு பயண நன்மைகளை அளவிட முடியாது - ஆர்.டி.ஐ. கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில்

புதுடெல்லி, நவ.1-
பிரதமர் மோடியின் வெளிநாட்டுபயணங்களினால் என்ன பயன்கள் கிடைத்தன என்பதை அளவிட முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டில் எந்தெந்த நாடுகளுக்குச் சென்று வந்தார்? அதற்கான செலவு,  வெளி நாடுகளில் எத்தனை நாள் கழித்தார்? அதனால் ஏற்பட்ட பயன்கள் என்ன என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  கிரித்திவாஸ் மண்டல்கேள்வி எழுப்பி இருந்தார். 

இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், பிரதமர் மோடி யின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த நன்மைகளை அள விட முடியாது.அது பற்றி பிரதமர் அலுவலகத்தில் அதிகாரப் பூர்வமாக எந்தவித பதிவுகளும் இல்லை. வெளிநாட்டு பயணங்கள் மற்றும்செலவுகள் பற்றி பிரதமர் அலுவலக இணைய தளத்தில் தகவல்கள் உள்ளன என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

 நான் கேட்ட விவரங்கள் முழுமையாக தரப்படவில்லை என்று மத்திய தகவல் ஆணையத்திடம் மண்டல் முறையிட்டுள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்காக எந்த நிதி பயன் படுத்தப்பட்டது என்ற விவரம் தரப்படவில்லை. எத்தனை மணி நேரம் வெளிநாடுகளில் செலவழித்தார் என்ற விவரமும் முழுமையாக இல்லை என்று தகவல் ஆணையத்திடம் விண்ணப்பதாரர் மீண்டும் முறையிட்டுள்ளார். எத்தனை மணி நேரம் என்ற விவரம் பதிவுகளில்  இல்லை என்று தலைமை ஆணையரும் பதில் அளித்திருக்கிறார்.

Label