OUR CLIENTS
கலப்பு இரட்டையர் போட்டி: சானியா-போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி
கலப்பு இரட்டையர் போட்டி: சானியா-போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி Posted on 12-Aug-2016 கலப்பு இரட்டையர் போட்டி: சானியா-போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி

ரியோ
டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ்- போபண்ணா ஜோடியும், பெண்கள் இரட்டையரில் சானியா மிர்சா- தாம்பரே ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- போபண்ணா ஜோடி களம் இறங்கியது.

இதில் லியாண்டர் பெயஸ்- போபண்ணா ஜோடியும், சானியா மிர்சா- தாம்பரே ஜோடியும் தங்கள் பிரிவில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி களம் இறங்கியது. முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சமந்தா - பியர்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா- போபண்ணா ஜோடி 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றுக்கு அடுத்த கால்இறுதி போட்டிதான்.

சானியா-போபண்ணா ஜோடி கால் இறுதியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே- வாட்சன் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் சானியா ஜோடிக்கு கடும் சவாலாக இருக்கும்.

Label