OUR CLIENTS
சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல் Posted on 01-Nov-2017 சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, நவ.1-
சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழையின் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மன்னார் வளைகுடா நோக்கி நகர்வதால் மழையின் அளவு தீவிரமடைந்துள்ளது. நேற்று   காலை 8:30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 21 இடங்களில் கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.
அடுத்து வரும்  24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பரவலாக மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டங்களான, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை நேற்று மாலை முதலிருந்து மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 17 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 செ.மீ, செம்பரம்பாக்கம் பகுதியில் 18 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.  இவ்வாறு, வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.

பலத்த மழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சியின் புயல் பாதுகாப்பு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

சென்னையில் 1913 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 044-25367823, 044-25384965 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 044 - 27237107, 044 - 27237207 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து 1077 என்ற  எண்ணில் 24 மணி நேரமும், 044 - 27664177 , 044 - 27666746 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Label