OUR CLIENTS
‘தமிழகம் முழுவதும் பட்டினிப்போராட்டத்தில் போலீசார்’ :பரவிய தகவலால் பரபரப்பு
‘தமிழகம் முழுவதும் பட்டினிப்போராட்டத்தில் போலீசார்’ :பரவிய தகவலால் பரபரப்பு Posted on 01-Nov-2017 ‘தமிழகம் முழுவதும் பட்டினிப்போராட்டத்தில் போலீசார்’  :பரவிய தகவலால் பரபரப்பு

சென்னை, நவ.1-
தமிழகம் முழுவதும் போலீசார் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சமூக வலை  தளங்களில் பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசின் 7வது ஊதியக்குழு முரண்பாட்டை கண்டித்து  தமிழகம் முழுவதும்  போலீசார் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இருதினம் முன் இரவு முதல் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட  சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. 7-வது ஊதியக்குழு முரண்பாட்டை சரி செய்யவும், கூடுதல் பணிக்கு அதிகப்படியான ஊதியம் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  போலீசார் பணியில் இருந்து கொண்டே   அக்டோபர் 30 ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் மறைமுகமாக ஈடுபட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களில் கூறப்பட்டிருந்தது.

போலீசாரே இந்த போராட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக தகவல் பரவியதால் போலீஸ் உயரதிகாரிகள் இது பெரும் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நந்தனம் சிக்னல் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிக்கும் விழா நடந்தது. அந்த விழாவுக்கு ஏராளமான போலீசார் பந்தோபஸ்து பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் பந்தோபஸ்துப் பணிக்கு போலீசார் யாரும் வராமல் புறக்கணித்து விடுவார்களோ என்ற பதட்டம் இருந்தது. இதனால் பந்தோபஸ்து பணிக்கு வராத மற்றும் பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் பெயர், விவரங்கள் பற்றி உளவுத்துறை போலீசார் நேற்று  முன்தினம் ரகசிய கணக்கெடுப்பு நடத்தும் படி உளவுத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் பந்தோபஸ்துப் பணிக்கு உத்தரவிடப்பட்டிருந்த அனைத்து போலீசாரும் பணிக்கு வந்திருந்தனர். ஆனால் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பணியில் இருந்து கொண்டே போராட்டத்தில் ஈடுபடுவதாக வாட்ஸ்ஆப்பில் தகவல்கள் பரப்பப்பட்டு வந்ததால் அதனை உளவுப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இதனையடுத்துபாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு வழக்கம் போல காலை உணவு வழங்கப்பட்டது. பெரும்பாலான போலீசார் உணவை போலீஸ் வேன்களில் அமர்ந்து சாப்பிட்டதாக தெரிகிறது. 

ஆனால் ஒரு சில போலீஸ்காரர்கள் உணவைப் பெற்றுக் கொள்ளாமல் அதனை அருகில் உள்ள கூலித் தொழிலாளிகள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு கொடுத்து விட்டு உணவு உண்ணாமல் போராட்டத்தில் போலீசார் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் கூலித்தொழிலாளிக்கு உணவு வழங்கியது போன்று புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த படங்கள் உண்மையானதுதானா அல்லது மார்பிங் செய்யப்பட்டதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label