OUR CLIENTS
கூடுவாஞ்சேரி தாங்கல் ஏரி உடைப்பு! : நந்திவரம் ஏரியும் உடையும் அபாயம்!!
கூடுவாஞ்சேரி தாங்கல் ஏரி உடைப்பு! : நந்திவரம் ஏரியும் உடையும் அபாயம்!! Posted on 01-Nov-2017 கூடுவாஞ்சேரி தாங்கல் ஏரி உடைப்பு! :  நந்திவரம் ஏரியும் உடையும் அபாயம்!!

சென்னை, நவ.1-
சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரி உடைந்து நீர் வெளியேற துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னையில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அனைத்து நீர்நிலைகளும் வெகுவேகமாக உயர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள பல ஏரிகள் நிரம்பி வருவதால் ஏரி உடையும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில்   கூடுவாஞ்சேரி தாங்கல் ஏரி உடைந்துவிட்டதாகவும், நந்திவரம் ஏரி உடையும் அபாயத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே நந்திவரம் மற்றும் தாங்கல் ஏரி உடையும் ஆபத்து இருப்பாதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எடுத்துரைத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த ஏரி உடைந்ததன் காரணமாக மேற்கு தாம்பரம் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு மாறி வருகின்றனர். கடந்த 2015ஆம்  ஆண்டிலும் இதே பகுதியில் வெள்ளம் சூழ்ந்து பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுவாஞ்சேரி ஏரி உடைந்ததால் ஊரப்பாக்கம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் நந்திவரம் ஏரியும் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடையாற்றிலும் கனமழை காரணமாக நீரின் மட்டம் அதிகரித்து வருவதால் அடையாற்றின் கரையோர மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

Label