OUR CLIENTS
ரேஷனில் சர்க்கரை விலை உயர்வு : தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் மழை காரணமாக ரத்து
ரேஷனில் சர்க்கரை விலை உயர்வு : தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் மழை காரணமாக ரத்து Posted on 02-Nov-2017 ரேஷனில் சர்க்கரை விலை உயர்வு : தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் மழை காரணமாக ரத்து

சென்னை, நவ. 2-
தமிழக ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதற்கு எதிராக தேமுதிக சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் பெய்துவரும் தொடர் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக அரசு திடீரென ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையை ரூ. 13.50-ல் இருந்து, 25 ரூபாயாக உயர்த்தியது. இந்த விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில்  03.11.2017 அன்று காலை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

தற்பொழுது சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆர்ப்பாட்டம் நடத்த முடியாத சூழ்நிலை இருப்பதால்,   நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து தேதி பின்னர் அறிவிக்கப்படும். என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label