OUR CLIENTS
பஞ்சாலையில் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்
பஞ்சாலையில் தீ விபத்து : ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் Posted on 02-Nov-2017 பஞ்சாலையில் தீ விபத்து  : ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்

பவானி, நவ.2-
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பஞ்சாயில் நேற்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு பகுதியில் திருப்பதி டெக்ஸ் என்ற பெயரில் பஞ்சாலை உள்ளது. இந்த ஆலையின் உரிமையாளர் ஈரோட்டை சேர்ந்த வெங்கடாச்சலம் ஆவார்.   இந்த பஞ்சாலை அந்த பகுதியில் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வட மாநிலத்தை சேர்ந்த 20 பேர் பகல் இரவு என 2 ‘ஷிப்டு’களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்த ஆலையில் திருப்பூரில் உள்ள காட்டன் வேஸ்டுகளை வாங்கி வந்து அதை நூல் ஆக தயாரித்து மீண்டும் திருப்பூருக்கே அனுப்பி வைக்கிறார்கள். 

இந்த மில்லில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மின்சார கோளாறு காரணமாக ஒரு எந்திரத்தில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ மள..மளவென எரிந்து பரவ தொடங்கியது.  அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.  இது குறித்து உடனடியாக பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்களாலும் அணைக்க முடியவில்லை.

Label