OUR CLIENTS
ஓ.பி.எஸ். முன்னிலையில் தேவர் தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு : இரு அணியினரின் வாழ்த்து கோ‌ஷத்தால் வாக்குவாதம்
ஓ.பி.எஸ். முன்னிலையில் தேவர் தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு : இரு அணியினரின் வாழ்த்து கோ‌ஷத்தால் வாக்குவாதம் Posted on 02-Nov-2017 ஓ.பி.எஸ். முன்னிலையில் தேவர் தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு  : இரு அணியினரின் வாழ்த்து கோ‌ஷத்தால் வாக்குவாதம்

மதுரை, நவ.2-
ஓ.பி.எஸ். முன்னிலையில் தேவர் தங்க கவசம் வங்கியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அப்போது இரு அணி தொண்டர்களும் போட்டி போட்டு வாழ்த்து கோஷமிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம், வங்கிக்கு எடுத்து வரப்பட்ட காட்சி.  ஒவ்வொரு ஆண்டும் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவின்போது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது.  மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளையின் பாதுகாப்பு பெட்டகத்தில் இந்த தங்க கவசம் வைக்கப்பட்டு இருக்கும்.
இந்த ஆண்டு தேவர் ஜெயந்தியையொட்டி தங்க கவசத்தை அணிவிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 27-ந்தேதி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், வங்கிக்கு வந்து தங்க கவசத்தை ஒப்படைக்குமாறு கோரினார். இதற்கு டி.டி.வி. தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பிறகு தேவரின் தங்க கவசம் மதுரை கலெக்டர் வசம் ஒப்படைக்க இரு தரப்பிலும் வங்கி அதிகாரிகள் ஒப்புதல் பெற்றனர்.  மதுரை கலெக்டர் வீரராகவராவ் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜனிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் தங்க கவசம் பசும்பொன் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.

தற்போது விழா நிறைவடைந்த நிலையில் தங்க கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் உள்ள வங்கிக்கு நேற்று எடுத்து வரப்பட்டது. அதை கலெக்டர்கள் வீரராகவராவ், நடராஜன் ஆகியோர் எடுத்து வந்து வங்கியில் ஒப்படைத்தனர்.  பின்னர் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வங்கிக்கு வந்தனர்.

சிறிது நேரத்தில் தினகரன் தரப்பைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வ.து. ஆனந்த், மதுரை மாவட்டச் செயலா ளர்கள் ஜெயபால், மகேந்தி ரன் மற்றும் டேவிட் அண்ணாதுரை ஆகியோரும் வங்கிக்கு வந்தனர். இரு தரப்பினர் முன்னிலையில் தங்க கவசம் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. வங்கி அதிகாரிகள் அதை லாக்கரில் வைத்தனர்.

வங்கி முன்பு இரு தரப்பைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர். ஓ.பி.எஸ். தரப்பைச் சேர்ந்த தொண்டர்கள் “அம்மா வாழ்க, எம்.ஜி.ஆர். வாழ்க” என்று கோ‌ஷமிடவும், தினகரன் தரப்பினர் “அம்மா வாழ்க, சின்னம்மா வாழ்க” என்று கோ‌ஷமிடவும் பரபரப்பு ஏற்பட்டது.  இரு தரப்பு வாழ்த்து கோ‌ஷங்களால் அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் சமரசம் செய்து இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர்.

Label