OUR CLIENTS
கோர்ட்டு தடையால் புதுயுக்தி : ராட்சத பலூனில் அ.தி.மு.க.வினர் விளம்பரம்
கோர்ட்டு தடையால் புதுயுக்தி : ராட்சத பலூனில் அ.தி.மு.க.வினர் விளம்பரம் Posted on 02-Nov-2017 கோர்ட்டு தடையால் புதுயுக்தி : ராட்சத பலூனில் அ.தி.மு.க.வினர் விளம்பரம்

கோவை, நவ.2-
உயிரோடு இருப்பவர்களின் படத்தை வைக்க கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் கோவையில் அ.தி.மு.க.வினர் ராட்சத பலூனில் விளம்பரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஜிட்டல் போர்டுகளில் உயிரோடு இருப்பவர்களின் படத்தை வைக்க கோர்ட்டு தடை விதித்தது.

இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திறந்து வைத்தார்.  விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தரும் முதல்வரை வரவேற்று காந்திபுரம் மேம்பாலத்தின் அருகே ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது.  அந்த பலூனில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோரது உருவப்படம் பதிக்கப்பட்டுள்ள அந்த பிரமாண்ட பலூன் வானில் பறக்க விடப்பட்டுள்ளது.  அ.தி.மு.க.வினரின் இந்த புது யுக்தி பரபரப்பாக பேசப்படுகிறது. அதேநேரம் முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகளில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மட்டும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Label