OUR CLIENTS
பணியில் ஓயாத தொல்லை : உச்சநீதிமன்றத்தை தஞ்சமடைந்த 2ஜி வழக்கு விசாரணை அதிகாரி
பணியில் ஓயாத தொல்லை : உச்சநீதிமன்றத்தை தஞ்சமடைந்த 2ஜி வழக்கு விசாரணை அதிகாரி Posted on 02-Nov-2017 பணியில் ஓயாத தொல்லை : உச்சநீதிமன்றத்தை  தஞ்சமடைந்த 2ஜி வழக்கு விசாரணை அதிகாரி

புதுடெல்லி, நவ.2 -
பணியில் தனக்கு தொல்லை தரப்படுவதாக கூறி, 2ஜி வழக்கில் அமலாக்கத்துறையின் புலன் விசாரணை அதிகாரியாக பணியாற்றிய ராஜேஸ்வர் சிங் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், சிபிஐ சார்பில் விவேக் பிரியதர்ஷி, அமலாக்கத்துறை சார்பில் ராஜேஸ்வர் சிங் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக செயல்பட்டனர்.

மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்த ராசா, திமுக எம்.பி.கனிமொழி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. 6 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் வரும் 7ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ராஜேஸ்வர்சிங் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். தனக்கு பணியில் தொல்லைகள் தரப்படுவதாகவும், தேவையற்ற வழக்குகளால் பணி உயர்வு பாதிக்கப்படுவதாகவும் தனது மனுவில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Label