OUR CLIENTS
டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி
டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி Posted on 02-Nov-2017 டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி

சென்னை, நவ.2-
பொது மக்கள் தங்கள் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) அல்லது பற்று அட்டை (டெபிட்கார்டு) பயன்படுத்தியே மின் கட்டணத்தை செலுத்த முடியும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு செல்லிடப் பேசி செயலி, ஏ.டி.எம். மையங்கள், வங்கி கிளைகளில் செலுத்துதல் போன்ற வசதிகள் நடைமுறையில் உள்ளன.  இதையடுத்து மின் கட்டணத்தை செலுத்தும் வகையில் மின் கட்டண வசூல் மையங்களுக்கு விற்பனை நிலைய கருவி (பி.ஏ.எஸ்.) வழங்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக சென்னை மத்திய மின் பகிர்மான வட்டம், மயிலாப்பூர் கோட்டத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் இத்திட்டம்  அமல் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இந்த திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.  இதன் மூலம் பொது மக்கள் தங்கள் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) அல்லது பற்று அட்டை (டெபிட்கார்டு) பயன்படுத்தியே மின் கட்டணத்தை செலுத்த முடியும். 

 “எளிய வகையில் மின்சாரம்” என்ற திட்டத்தின்கீழ் தொழிற்சாலைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் அளிக்கும் நிலத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரு துணை மின் நிலையத்தை அமைக்கும். அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டி மூலம் தொழிற்சாலைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.   

அந்த வகையில் ஜி.எம்.ஆர். கிருஷ்ணகிரி சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற நிறுவனத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில்  கையெழுத்தானது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்தில் 230 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.  நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, துறை செயலாளர் விக்ரம் கபூர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தின் தலைவர் எம். சாய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Label