OUR CLIENTS
ஜிஎஸ்டியால் ஊழல் குறைந்து தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது : ராகுலுக்கு அருண் ஜெட்லி பதில்
ஜிஎஸ்டியால் ஊழல் குறைந்து தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது : ராகுலுக்கு அருண் ஜெட்லி பதில் Posted on 03-Nov-2017 ஜிஎஸ்டியால் ஊழல் குறைந்து தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது : ராகுலுக்கு அருண் ஜெட்லி பதில்

புதுடெல்லி, நவ.3-
ஜி.எஸ்.டி.யால் ஊழல் குறைந்து தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும் பாஜக அரசுக்கும் உள்ள வேறுபாடு என ராகுல் காந்தியின் கருத்துக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி தந்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குஜராத்தில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது பாஜக அரசு ஜிஎஸ்டி.யை அமல்படுத்தி நாட்டை அழித்துவிட்டது என்று குற்றஞ்சாட்டினார். 

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் கூறியதாவது:  ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டது. சரக்கு மற்றம் சேவை வரி (ஜிஎஸ்டி) காரணமாக இந்தியாவில் தொழில்துறையின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் தொழில் செய்வதற்கான எளிமையான வாய்ப்புகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வெற்றிபெற்றுவிட்டதாக பெரிதாகக் கொண்டாடுகின்றனர். ஆனால் மக்களின் மனநிலை வேறுமாதிரியாக உள்ளது.  மக்கள் ஜிஎஸ்டி-க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தாக்கம், எதிர்வரும் குஜராத் தேர்தலில் தெரியவரும். பாஜக அப்போது மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று ராகுல் காந்தி கூறினார். 

இந்நிலையில், ராகுலின் இந்த கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி அளித்துள்ளார்.  இதுகுறித்து அருண் ஜெட்லி கூறியதாவது: ‘‘ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவில் எளிமையாக ஊழல் செய்யும் நிலை மாறி,  எளிமையாக தொழில் தொடங்கும் நிலை வளர்ந்து வருகிறது. இதுவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் இடையே உள்ள வேறுபாடு’’ என்று அருண் ஜெட்லி கூறினார்.

எளிமையாக தொழில் செய்ய ஏற்புடைய 190 வளரும் நாடுகளின் பட்டியலை செவ்வாய்கிழமை அன்று உலக வங்கி வெளியிட்டது. அதில் கடந்த ஆண்டு 130வது இடத்தில் இருந்த இந்தியா 30  இடங்கள் முன்னேறி தற்போது 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.  மேலும், வரும் 2018 ஆண்டு காலக்கட்டத்தின் அடிப்படையில் வளரும் சிறந்த 10 நாடுகளில்  இந்தியாவும் இடம்பிடித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Label