OUR CLIENTS
ஆட்சியால் பலனில்லை; நீதிமன்றத்தையே நம்பியிருக்கிறோம் - ஸ்டாலின் நம்பிக்கை விளக்கம்
ஆட்சியால் பலனில்லை; நீதிமன்றத்தையே நம்பியிருக்கிறோம் - ஸ்டாலின் நம்பிக்கை விளக்கம் Posted on 03-Nov-2017 ஆட்சியால் பலனில்லை; நீதிமன்றத்தையே நம்பியிருக்கிறோம்  - ஸ்டாலின் நம்பிக்கை விளக்கம்

புதுக்கோட்டை,   நவ.3-
நீதியை, நியாயத்தை, நேர்மையை அதிமுக ஆட்சியின் மூலமாக பெற முடியவில்லை என்பதால், நீதிமன்றங்களின் மூலம் அதைப் பெறும் நிலையில் இருக்கிறோம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் வீ.கண்ணதாசன் இல்லத் திருமணவிழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.  அப்போது அவர் பேசும்போது,  தமிழகத்தில் நடக்கும் இந்த 'குதிரை பேர' ஆட்சிக்கு எத்தனையோ முறை நீதிமன்றம் அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கியது மட்டுமல்ல, கண்டனங்களையும் தெரிவித்துக் கொண்டு இருக்கிறது.  எனவே, நீதியை, நியாயத்தை, நேர்மையை இந்த ஆட்சியின் மூலமாக பெற முடியவில்லை என்பதால், நீதிமன்றங்களின் மூலம் பெறும் நிலையில் இருக்கிறோம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Label