OUR CLIENTS
இலங்கை கடற்படையினர் தொடரும் அட்டூழியம் : 14 தமிழக மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையினர் தொடரும் அட்டூழியம் : 14 தமிழக மீனவர்கள் கைது Posted on 03-Nov-2017 இலங்கை கடற்படையினர் தொடரும் அட்டூழியம் : 14 தமிழக மீனவர்கள் கைது

ராமேஸ்வரம், நவ.3-
நெடுந்தீவு அருகில் மீன் பிடித்த 14 தமிழக மீனவர்களை அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்பகுதி நெடுந்தீவிற்கு அருகில் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் நேற்று மீன்பிடித்துள்ளனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் தெரிவித்தார்.  கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த 14 மீனவர்களும் காங்கேசன் துறைதுறைமுகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதாக அவர் கூறினார்.  கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி, முதலமைச்சர் பழனிசாமி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள 54 மீனவர்களையும், 140 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Label