OUR CLIENTS
5 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடகை சைக்கிள் திட்டம்
5 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடகை சைக்கிள் திட்டம் Posted on 03-Nov-2017 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடகை சைக்கிள் திட்டம்

சென்னை, நவ.3-
கோயம்பேடு, வடபழனி, கிண்டி, ஆலந்தூர் உட்பட மேலும் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடகை சைக்கிள் திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாடகை சைக்கிள் திட்டம் நடைமுறைப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈக்காட்டு தாங்கல், நேரு பூங்கா, திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு உள்ளிட்ட 7 நிலையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களை நிலையத்தில் விட்டுவிட்டு வருவதால் அலுவலகங்களுக்கு செல்ல அதிகளவு சைக்கிளை பயன்படுத்த விரும்புகிறார்கள்.

தற்போது 4 சைக்கிள் மட்டுமே மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளன. ஆனால் பயணிகள் தேவை அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு மேலும் சில ரயில் நிலையங்களில் சைக்கிள் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஏற்கனவே செயல்படுத்தப்படும் நிலையங்களில் கூடுதலாக சைக்கிள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 25 சைக்கிள்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் புதிய சைக்கிள்கள் கூடுதலாக ரயில் நிலையங்களில் பொது மக்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:-  வாடகை சைக்கிள் திட்டத்திற்கு பொது மக்கள் இடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ரயிலில் இருந்து இறங்கி அலுவலகங்களுக்கு உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்லவும் அதிகளவு பயன்படுத்துகிறார்கள். மக்கள் தேவை அதிகரித்துள்ளதால் மேலும் 25 சைக்கிள்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அவற்றை கோயம்பேடு, ஆலந்தூர், கிண்டி, வடபழனி, பச்சையப்பா கல்லூரி, அண்ணாநகர் கிழக்கு, ஈக்காட்டுதாங்கல் ஆகிய நிலையங்களுக்கு பயன்படுத்த இருக்கிறோம்.

எந்த பகுதியில் அதிக தேவை இருக்கிறதோ அதற்கேற்றவாறு சைக்கிள் ஒதுக்கப்படும். இன்னும் ஒரு மாதத்தில் புதிய சைக்கிள் வந்து விடும். கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆதி சைக்கிள் கிளப் மூலம் சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

சென்னையிலும் அந்த கிளப் நேரு பூங்கா, வடபழனி, திருமங்கலம் ஆகிய நிலையங்களில் சைக்கிள் திட்டத்தில் சைக்கிள்களை மாதத்திற்கு 100 மணி நேரம் இலவசமாக வழங்குகிறது.
மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் சைக்கிள்களுக்கு வாடகை எதுவும் இல்லை. ஆனால் டெபாசிட் தொகையாக ரூ.3000 பெறப்படும். இத்திட்டத்தில் சேரும் பயணிகள் தங்களின் வீட்டு முகவரி மட்டும் அடையாள சான்றாக தர வேண்டும். இதற்காக ஒரு அட்டை வழங்கப்படும். ஒருமாதம் மட்டுமல்ல, 2 மாதம் வரை கூட தொடர்ச்சியாக சைக்கிளை பயன்படுத்தலாம். எந்த ரயில் நிலையத்தில் இருந்து சைக்கிளை எடுத்து சொல்கிறோமோ அதே நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆனால் சைக்கிளை திரும்ப ஒப்படைக்கும் போது பெற்று சென்ற நிலையில் எவ்வாறு இருந்ததோ அதுபோன்று வழங்க வேண்டும். ஏதாவது சேதம் அடைந்திருந்தால் அதற்கான தொகை டெபாசிட் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

எந்தந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் சைக்கிள் தேவை அதிகமாக உள்ளது என்பதை அறிந்து எதிர் காலங்களில் அங்கு கூடுதலாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label