OUR CLIENTS
வடசென்னைக்கு ஆபத்து கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள சாலையை அகற்ற ஆட்சியர் அதிரடி உத்தரவு
வடசென்னைக்கு ஆபத்து கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள சாலையை அகற்ற ஆட்சியர் அதிரடி உத்தரவு Posted on 06-Nov-2017 வடசென்னைக்கு ஆபத்து கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள சாலையை அகற்ற ஆட்சியர் அதிரடி உத்தரவு

சென்னை, நவ.6-
மழை நீர் வெளியேற வழியில்லாமல் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாலையை அகற்றும் பணிகள் நடைபெறுவதாக ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்தார். 

வடசென்னையில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையம் தங்களது போக்குவரத்து வசதிக்காக கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சாலை அமைத்துள்ளது. இதனால் மழையோ, பெருவெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால் அந்த நீர் கொசஸ்தலை ஆற்றில் செல்ல வழியில்லாமல் கழிமுகத் துவார பகுதிகளுக்கு அருகே தேங்கி நிற்கிறது.  இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டுவதால் நீர் செல்ல வழியின்றி வடசென்னை மூழ்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். நடிகர் கமல்ஹாசனும் இதுகுறித்த எச்சரிக்கை விடுத்ததுடன் அந்த பகுதிகளை நேரில் சென்றும் பார்வையிட்டார்.

இதையடுத்து ஆக்கிரமிப்புகள் இருப்பது ஊர்ஜிதமானால் அவை அகற்றப்படும் என்று ஆட்சியர் சுந்தரவல்லி உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த 6 நாள்களாக பெய்த மழையால் வியாசர்பாடி, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.  இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆய்வு செய்தார்.  கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே போடப்பட்ட சாலையை அகற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

அந்த பணிகளை செயல்படுத்துவதற்காக களத்துக்கு சென்று ஆய்வு செய்தேன். தற்போது சாலை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர். இதையடுத்து மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் சீனிவாசன் கூறுகையில், ஆட்சியர் உத்தரவுபடி சாலையை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகள் முடிவடைய இன்னும் ஓரிரு நாள்கள் ஆகும். இந்த பணிகளுக்கு பிறகு வெள்ள நீர் அப்பகுதிகளில் தேங்காது.

Label