OUR CLIENTS
பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள் : ரசிகர்கள் மத்தியில் கமல் உறுதிமொழி
பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள் : ரசிகர்கள் மத்தியில் கமல் உறுதிமொழி Posted on 06-Nov-2017 பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள்  : ரசிகர்கள் மத்தியில் கமல் உறுதிமொழி

சென்னை , நவ.6-
சென்னை கேளம்பாக்கத்தில் நற்பணி இயக்கத்தினரை நடிகர் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார். ரசிகர்களை சந்தித்து , கமல்ஹாசன் பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள் என கூறியுள்ளார். 

அரசியல் பிரவேசம் தொடர்பாக சென்னையில் 1800 ரசிகர்களுடன் நடிகர் கமல்ஹாசன்நேற்று ஆலோசனை நடத்தினார். நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலமாக தமிழக அரசை மிகக் கடுமையாக சாடினார். இதற்கு அமைச்சர்கள் பலரும் கடுமையாக பதிலடி கொடுத்தனர். நடிகர் ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என பேசினார். ஆனால் கமல்ஹாசனோ இதைத்தான் நான் முன்னரே சொல்லி வருகிறேன் என்றார்.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தமக்கான பிரசார களமாக்கிக் கொண்டார் கமல்ஹாசன். அப்போது நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன் என பிரகடனம் செய்தார்.  வார இதழ் ஒன்றில் தொடரை எழுதி வரும் கமல்ஹாசன் வரும் 7-ந் தேதி முக்கியமான அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறியிருந்தார். அப்படியானால் 7-ந் தேதி அரசியல் கட்சியை தொடங்குகிறாரா கமல்ஹாசன் என்ற கேள்வி எழுந்தது. இதற்கும் ட்விட்டரில் மறுப்பு தெரிவித்திருந்தார் கமல்ஹாசன்.  மேலும் தமது நற்பணி மன்றத்தினரை ஒருங்கிணைக்க ஆப் ஒன்றை நவம்பர் 7-ந் தேதி கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், தனது நண்பர்கள், நற்பணி இயக்கத்தினர் விவசாயிகளுக்கு ஏரி, குளங்களை செப்பனிட உதவி செய்வார்கள் என கூறினார். 

 வரும் 7ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நடிகர் கமல்ஹாசன், கேளம்பாக்கத்தில்  தனது ரசிகர்களை  நேற்று  சந்தித்து  பேசினார்.  இந்நிலையில் கேளம்பாக்கத்தில் தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். தமிழக நலனுகளுக்காக ரசிகர்களிடம் 37 ஆண்டுகளாக கையேந்தி வருகிறேன். தமிழகத்துக்காக கையேந்துவதில் எனக்கு வெட்கம் இல்லை. பதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள்.     இயற்கை சீற்றத்துக்கு ஏழை, பணக்காரர் என வித்தியாசம் தெரியாது. சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்து வருகிறோம். பேரழிவு வரும் வரை கத்திருக்க வேண்டுமா? வரும் முன் காக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று ரசிகர்களுடனான சந்திப்பில் பேசினார். 

நவம்பர் 7 தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்கள் கேக் வெட்ட வேண்டிய நேரம் இல்லை. அதற்கு மாறாக கால்வாய் வெட்ட வேண்டிய நேரம் இது. எனக்கான பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து மக்களுக்காக பணியாற்றுங்கள். நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதற்கட்ட தொடக்கம் தான் செயலி. அரசியல் கட்சி தொடங்குவதற்கு பணம் இல்லை என்று கவலை இல்லை.  கட்சி தொடங்க பணம் தேவை என்றால் அதைக் கொடுக்க ரசிகர்கள் தயாராக உள்ளனர். ரசிகர்கள் வழங்கும் பணத்திற்கு கணக்கு வைக்க செயலி பயன்படும். சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தை மீட்க முயற்சிப்பேன், பணத்தை சுவிஸ் வங்கியில் போடமாட்டேன். இது தொடக்க கூட்டம் தான், இன்னும் 50 கூட்டங்களை இது போல நடத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் பேசினார். 

தமிழகம் முழுவதும் இருந்து 1,800 ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது அரசியல் பிரவேசம், ஏரி, குளங்களை தூர் வாருதல் தொடர்பாக ஆலோசித்தார்.

Label