OUR CLIENTS
காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை Posted on 06-Nov-2017 காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், நவ.6-
ஜம்மு காஷ்மீர் பராமுல்லா மாவட்ட எல்லைப் பகுதியில் நேற்று ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பராமுல்லா மாவட்டம் யுரி செக்டாரில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாட்டம் இருப்பதை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த பாதுகாப்புப் படை வீரர்கள், ஒரு கட்டத்தில் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புயத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இருவரும் பயங்கரவாதிகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதால், தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறினார்.

Label