OUR CLIENTS
எண்ணெய் ஆலையில் வெடி விபத்து!
எண்ணெய் ஆலையில் வெடி விபத்து! Posted on 06-Nov-2017 எண்ணெய் ஆலையில் வெடி விபத்து!

சண்டிகர், நவ.6-
அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் நேற்று எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

 அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹிசார்-டோஹான் சாலையில் பிரபல எண்ணெய் ஆலை ஒன்றுள்ளது. இந்த ஆலையில் உள்ள எண்ணெய் டேங்கரில் நேற்று ஏற்பட்ட கசிவினால் அங்கிருந்த டேங்கர்களில் ஒன்று வெடித்து தீப்பிழம்பாக சிதறியது.

இந்த விபத்தினால் அந்த ஆலை இருந்த கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமடைந்து தரைமட்டமானது. அங்கிருந்த தொழிலாளர்களில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 7 பேருக்கு 90 முதல் 100 சதவீதம் வரை தீக்காயங்கள் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தேசிய அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 33 பலியான நிலையில்நேற்று ஏற்பட்ட இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Label