OUR CLIENTS
பணமதிப்பு நீக்கம் குறித்து புத்தகமாகும் சிதம்பரத்தின் கருத்துகள்
பணமதிப்பு நீக்கம் குறித்து புத்தகமாகும் சிதம்பரத்தின் கருத்துகள் Posted on 06-Nov-2017 பணமதிப்பு நீக்கம் குறித்து   புத்தகமாகும்  சிதம்பரத்தின் கருத்துகள்

சென்னை, நவ.6-
பணமதிப்பு நீக்கம் தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறிய கருத்துகள், பேட்டிகள், உரைகள் ஆகியவற்றைத் தொகுத்து, டிசம்பர் 8-ம் தேதி நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தையொட்டி நூலாக விநியோகிக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

பணமதிப்பு நீக்க அறிவிப்பை மத்திய அரசு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது.   இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கண்டிக்கும் விதமாக வரும் நவம்பர் 8-ம் தேதியை கறுப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. அன்றைய தினம் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்களை அவதிக்குள்ளாக்கும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, எவ்வித பலனையும் தராது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆரம்பம் முதலே கூறிவருகிறார்.

இந்த நிலையில், நவம்பர் 8-ம் தேதி நடக்கவுள்ள கறுப்பு தின ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, பணமதிப்பு நீக்கம் தொடர்பாக ப.சிதம்பரம் இதுவரை தெரிவித்த கருத்துகள், பேட்டிகள், உரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக வெளியிடும் முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Label