OUR CLIENTS
வறுமை, சாதியவாதம், மதவாதம் இல்லாத இந்தியா: நிதி ஆயோக்
வறுமை, சாதியவாதம், மதவாதம் இல்லாத இந்தியா: நிதி ஆயோக் Posted on 06-Nov-2017 வறுமை, சாதியவாதம்,  மதவாதம் இல்லாத இந்தியா: நிதி ஆயோக்

புதுடெல்லி, நவ.6-
2022-ம் ஆண்டில் வறுமை, சாதியவாதம் மற்றும் மதவாதத்தில் இருந்து இந்தியா விடுதலை அடையும் என நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற உடன் திட்டக்குழு கலைக்கப்பட்ட அதற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ளன. இந்நிலையில், 2022-ல் புதிய இந்தியா விஷன் என்ற தொகுப்பு அறிக்கை நிதி ஆயோக்கால் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையில், மோடியால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி ஆகியவை புரட்சியகர நடவடிக்கைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து 2022-ம் ஆண்டில் பவளவிழா கொண்டாடப்படும் போது வறுமை, சாதியவாதம் மற்றும் மதவாதத்தில் இருந்து இந்தியா விடுதலை அடைந்திருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடப்படும் போது அதாவது 2047-வது ஆண்டில் இந்தியா உலகின் மூன்று பொருளாதார சக்திகளில் ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானியத்தொகைகளை வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்துவதினால் 57 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Label