OUR CLIENTS
நடிகை அமலாபால் கார் விவகாரம் புதுவையில் கேரள போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் விசாரணை
நடிகை அமலாபால் கார் விவகாரம் புதுவையில் கேரள போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் விசாரணை Posted on 07-Nov-2017 நடிகை அமலாபால் கார் விவகாரம் புதுவையில் கேரள போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் விசாரணை

புதுச்சேரி, நவ.7-
நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரம் குறித்து கேரள போக்குவரத்து ஆணைய உதவி செயலர் சந்தோஷ் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை புதுச்சேரி போக்குவரத்து துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்கள்.

புதுச்சேரியில் வரி ஏய்ப்பு செய்து நடிகை அமலாபால் கார் வாங்கியதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இதனை புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறையும் அமலாபாலும் மறுத்துள்ளனர்.

அதே வேளையில் புதுச்சேரியில் வாகன வரி குறைவாக இருப்பதால் கேரளாவை சேர்ந்த பலரும் இங்கு வாகனங்களை வாங்கி கேரளாவில் இயக்குகின்றனர். இவர்களது பட்டியலுடன் கேரள போக்குவரத்து அதிகாரிகள் குழு புதுச்சேரி வந்தது. அதில் கேரள போக்குவரத்து ஆணைய உதவி செயலர் சந்தோஷ் தலைமையில்  அதிகாரிகள் ஜேம்ஸ்,வினோத்,ஜார்ஜ் ஆகியோர்  புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள  போக்குவரத்து துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்கள்.

கேரளாவில் ஓடும் புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங்களின் பட்டியலை காண்பித்து அவற்றின் முகவரிகளை பெற்றனர்.இன்னும் ஒருவார காலம்  புதுச்சேரியில் தங்கி முகவரிகளை சரி பார்ப்போம்..பின்னர் ஆய்வு அறிக்கையை கேரள போக்குவரத்து ஆணையருக்கு சமர்ப்பிப்போம் என உதவி செயலர் சந்தோஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Label