OUR CLIENTS
தலைமைச் செயலாளர் இன்று நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
தலைமைச் செயலாளர் இன்று நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு Posted on 07-Nov-2017 தலைமைச் செயலாளர் இன்று நேரில் ஆஜராக  உயர் நீதிமன்றம் உத்தரவு

 சென்னை, நவ.7-
சென்னை கோயம்பேட்டில் அங்காடி கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில்  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோயம்பேடு வணிக வளாகத்தில் பயன்படுத்தாத நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறு 2013 ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவை 3 மாதத்திற்குள் அமல்படுத்துவதாக கடந்த அக்டோபரில் தமிழக அரசு உறுதியளித்திருந்தது.   இது குறித்து சோமு என்பவர் தொடர்ந்த வழக்கில் தலைமைசெயலாளர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 4 பேர் உரிய விளக்கமளிக்க ஆஜராகுமாறு நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Label